நடுவானில் திறந்த விமான கதவு Twitter
உலகம்

நடுவானில் திறந்த விமான கதவு: பதறிய பயணிகள் செய்தது என்ன?

NewsSense Editorial Team

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, அதன் கதவுகள் திடீரென திறந்து கொண்டதாகப் பல ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால் அது உண்மையாகவே நடந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்.

உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம், சில துரதிர்ஷ்டசாலிகளுக்கு சில தினங்களுக்கு முன் நடந்தது. அது தொடர்பான சில காணொளிகளும் சமீபத்தில் இணையத்தில் வைரலாயின.

பிரேசில் நாட்டில் ஜோர்டாவ் என்கிற நகரத்திலிருந்து ரியோ நகர விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடந்தது எனக் கூறப்படுகிறது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே திடீரென கதவு திறந்து கொண்டது.

கதவின் கைப்பிடி பகுதி, விமான என்ஜினின் ப்ரொபெல்லரில் மோதி பிரச்சனையைப் பெரிதாக்கியது. அந்த விமானத்தில் பயணித்த இருவர், விமானம் தரை இறங்கும் வரை அதன் கதவை இறுகப் பற்றிப் பிடித்த படியே பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த போராட்டம் சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சில ஊடகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளன.

விமானம்

என்ஜின் பாதிக்கப்பட்ட பிறகு, விமானி, இடது புற என்ஜினை அனைத்துவிட்டு விமானத்தைப் பாதுகாப்பாகச் செலுத்தியதாகவும் பயணிகள் கூறியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக விமானம் மேற்கொண்டு எந்த விபத்துக்கும் உள்ளாகவில்லை. அதே போல அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விமான கதவை அணைத்துப் பிடிக்கும் ஒரு கேபிள் அருந்ததால்தான் கதவு திறந்து கொண்டதாம். இந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்த விமானம் ஒரு எம்ப்ரேர் 110 பண்டெய்ரன்ட் (Embraer 110 Bandeirante) பிரெசிலியன் டர்போ ப்ராப் இலகு ரக விமானம் என்பது மற்றொரு ஆறுதலான விஷயம். இது வழக்கமான வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் விமானம் அல்ல. இந்த சிறிய ரக விமானத்தில் 15 - 21 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க முடியும். ரியோ பிரான்கோ ஏரோடாக்ஸி என்கிற நிறுவனம் தான் இந்த விமானத்தை இயக்கியதாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த சில உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

CENIPA (Centre for Investigation and Prevention of Aeronautical Accidents) என்கிற பிரேசில் நாட்டு விமான விபத்து குறித்து விசாரிக்கும் அமைப்பிடம், இந்த விபத்து குறித்து போதிய விவரங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளதாக, ரியோ பிரான்கோ ஏரோடாக்ஸி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிரேசில் நாட்டு ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?