மான்செஸ்டரில் இருந்து ஷிபொல் விமான நிலையம் நோக்கிச் சென்ற விமானத்தில் திடீரென இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சண்டையை தனது செல்ஃபோனில் படம் பிடித்த சக பயணி ஒருவர் கூறுகையில், ஒருவரது இனத்தையும் நிறத்தையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் சர்ச்சை கிளம்பியது என்று குறிப்பிட்டார்.
விமானம் மான்செஸ்டரிலிருந்து புறப்பட்டது முதலே ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பைக் குறிவைத்து நிற பேதத்தை தூண்டும் விதமாக கருத்துகளை சொல்லிவந்ததாகவும், அதனால் அமைதியற்ற நிலை இருந்ததாகவும், பயணிகள் கூறினர்.
இந்த சம்பவத்தின் காணொலி காட்சியில் சுமார் 20 வயதில் இருக்கும் ஒரு நபரை, மூன்று பேர் ஏறி அடிப்பதும், அதற்கு பயணிகள் தடுத்க்கும், விமானத்தில் சற்று சரிவர நடந்துகொள்ளுமாறும் கேட்கும் ஆடியோக்கள் பதிவாகியிருந்தன.
இரு தரப்பினரிடையே மோதல் முற்றவே, கேப்டன் இறங்கி வந்து அடிவாங்கிக்கொண்டிருக்கும் நபரை இழுத்து சென்றார். இதற்கிடையில் மேலும் இருவர் மற்றுமொரு பயணியை விடாது தாக்கும் காட்சிகளும் பதிவாகியிருக்கிறது.
விமானம் தரையிறங்கிய உடனே காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து அழைத்து சென்றதாக ராயல் நெதர்லாந்தின் செய்தித் தொடர்பாளர் மரேச்சௌஸ்ஸி தெரிவித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu