வடகொரியா : நடுங்க வைக்கும் 'ஜாம்பி படைகள்'- இராணுவ அணிவகுப்பின் காரணம் என்ன? Twitter
உலகம்

வடகொரியா : நடுங்க வைக்கும் 'ஜாம்பி படைகள்'- இராணுவ அணிவகுப்பின் காரணம் என்ன?

Antony Ajay R

கொரிய மக்கள் இராணுவம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கடந்த புதன் அன்று இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் தலைநகர் பியோங்யாங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

உளவாளிகள், அரசு எதிர்ப்பாளர்கள் ஆயுதமேந்தியவர்கள் யாரும் நுழைந்துவிடாதப்படி பலத்த பாதுகாப்புடன் அணிவகுப்பு நடைபெற்றது.

அனுமதியில்லாமல் யாரும் தலைநருக்குள் காலடி கூட எடுத்துவைக்க முடியாதபடிக்கு பலத்த பாதுகாப்பு இருந்ததாக ரேடியோ ஃப்ரீ ஏசியா செய்தி கூறுகிறது.

அணிவகுப்பில் எடுக்கப்பட்ட படங்களை சில கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கொரிய இராணுவ வீரர்கள், படைகள், ஏவுகனைகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் அணிவகுப்பில் காட்சிபடுத்தப்பட்டன. சில ஆயுதங்களை உலகிலேயே பலம் வாய்ந்த ஏவுகனை எனக் கூறியதாக செய்திநிறுவனங்கள் கூருகின்றன.

கொரியப்படைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்த ஊடகவியலாளர் ஜீன் ஹெச்.லீ ஜாம்பி படைகள் என ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.

"நான் இராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட பெரிய ராக்கெட்களின் புகைப்படத்தை பகிரப்போவதில்லை. அவை பிச்சாராம் செய்யப்படுகின்றன.

ஆனால் நான் கிம் 2 சுங் சதுக்கத்தில் இருந்த ஆண்டுகளில் இந்த ஜாம்பி படையைப் பார்த்ததே இல்லை. இப்போது இவை என்னை பயமுறுத்துகின்றன" என ட்வீட் செய்துள்ளார்.

ஊடகவியலாளர் ஜீன் ஹெச்.லீ ( Jean H. Lee ) வடகொரியாவின் ஒரே அமெரிக்க பத்திரிக்கையாளராக 2008 முதல் 2013 வரை பணியாற்றினார்.

வடகொரியாவுக்குள் நுழைய அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வடகொரிய பள்ளிகள், விளைநிலங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் மற்றும் இராணுவ கல்விக் கூடங்களை ஆராய்ந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?