Sandwich Twitter
உலகம்

கர்ப்பிணி பெண்ணின் சாண்ட்விட்சில் இருந்த கத்தி - மன்னிப்புக் கேட்ட நிறுவனம்

Keerthanaa R

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சப்வே பார்சலுக்குள் கத்தி ஒன்று கண்டறியப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்யும் உணவுகளை சரிவர டெலிவர் செய்யாத பல புகார்களை கேட்டிருப்போம். காபியில் சிக்கன் துண்டு, உணவுகளில் இறந்த பல்லி, துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை என முகம் சுழிக்கவைக்கும் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது.

சப்வே பார்சலுக்குள் கத்தி

அந்த வகையில் இங்கு ஒரு பெண்ணுக்கு அவர் ஆர்டர் செய்த சாண்ட்விச் பார்சலில் கத்தி ஒன்று இருந்துள்ளது. நெரிஸ் மாய்ஸ் என்ற 21 வயது பெண், பிரபல சண்ட்விச் நிறுவனமான சப்வேயிலிருந்து சாண்ட்விச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அந்த பொட்டலத்தில் தான் கத்தி ஒன்று இருந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் மாய்ஸ், அவருக்கு சாண்ட்விச் சாப்பிடவேண்டும் என்பது போல இருந்ததால் அதை ஆர்டர் செய்ததாக தெரிவித்தார்.

பார்சலுக்குள் கத்தியை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளூர் சவ்பேவை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது மாய்ஸின் கணவர், "நீங்கள் எதாவது மஞ்சள் நிற கத்தியை தொலைத்து விட்டீர்களா?" எனக் கேட்டுள்ளார்.

சப்வே பார்சலுக்குள் இருந்த கத்தியை வீடியோ எடுத்து தனது ஃபேஸ்புக் அக்கவுன்டில் மாய்ஸ் பகிர்ந்திருந்தார். இதன் பிறகு சப்வே, அவர்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் மூலம் மாய்சை தொடர்புகொண்டு, மன்னிப்பு கேட்டதுடன் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

மேலும் நிகழ்ந்த பிழையை சரி செய்ய, அந்த வாடிக்கையாளரையும் தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?