Prime Minister Modi Visits the Pyramids of Giza; Facts That Make The Pyramids Iconic Twitter
உலகம்

எகிப்தின் 1000 ஆண்டு பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி - அங்கு என்ன சிறப்பு உள்ளது?

உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழும் இந்த பிரமிடுகளை ஆண்டுதோறும் 14.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர்.

Priyadharshini R

கிசா பிரமிடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று அல்-ஹக்கீம் மசூதியை பார்வையிட்டார். இது 1013 ஆம் ஆண்டில் அல்-ஹக்கீம் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது, அதனால்தான் இது அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் கட்டுமான அழகை வியந்து பாராட்டியிருக்கிறார் பிரதமர் மோடி

அதன் பின்னர் கிசா பிரமிடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எகிப்தின் பாரம்பரியம், கலாச்சாரத்தை அல்-ஹக்கீம் மசூதி பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழும் இந்த பிரமிடுகளை ஆண்டுதோறும் 14.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர்.

என்ன சிறப்பு உள்ளது?

பிரமிடுகள் பழங்கால எகிப்தியர்களின் அடையாளமாக திகழ்கின்றன. அதிலும் முக்கியமாக கிசா பிரமிடானது கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களாகியும் நிலைத்து நிற்கின்றது.

இது எகிப்தியர்களின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலை அற்புதத்தையும் பறைசாற்றுகிறது.

கிசா பிரமிடு, 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது.

இந்த கற்களை எங்கிருந்து எப்படி எடுத்து வந்தார்கள், ஒன்றின் மீது ஒன்றாக எப்படி கட்டமைக்கப்பட்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?