அருணாசலம் படத்தில் அப்பா சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை ரஜினி செலவு செய்ய வேண்டிய நிலை வரும். சாமானியர்களுக்கு பணம் செலவு செய்வதே எவ்வளவு கடினமான செயலாக இருக்கும் என ரஜினி காமடி கலந்து நடித்திருப்பார். உண்மையிலேயே அப்படி ஒருவர் செலவு மட்டும் செய்து வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
அமெரிக்காவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் ரோமா அப்தெஸ்ஸலாம் தான் அந்த நபர். எந்த வேலையும் இல்லாத அவருக்கு தினமும் அவரது பெற்றோர் சம்பாதித்து வைத்திருப்பதை செலவு செய்வது தான் வேலையாம்.
உலகிலேயே வாழ்வதற்கு அதிக பணம் செலவாகும் நகரமான நியூயார்கில் தான் அவர் வசிக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் எப்படி எப்படியெல்லாம் பணத்தை செலவு செய்கிறார் என டிக்டாக், ரீல்ஸில் பதிவிடுகிறார்.
அதிக விலைமதிப்பு மிக்க நகைகள் மற்றும் ஆடைகளை அவர் ரீல்ஸில் காண்பிக்கிறார். சமீபத்தில் ஒரு ரீல்ஸில் அவர், தான் தினசரி $50,000 ரூபாய் செலவழிப்பதாகக் கூறினார். இது இந்திய மதிப்பில் ₹39.9 லட்சம்.
எதாவது வேலை பாக்கலாமா என சிந்தித்த அவருக்கு, பெற்றோர் பணத்தை செலவு செய்வது தான் எனக்கு மகிழ்ச்சியான வேலையாக இருக்கும் எனத் தோன்றியதாக ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
ஒரு வீடியோவில் அவர், "நான் தினமும் £41,000 ($50,000) செலவு செய்வதால் என்னை வியாபாரிகள் பலமுறை ஏமாற்றுகின்றனர். "இது தான் கடைசியாக இருக்கிறது, இது மிகவும் கவர்ச்சியானது" எனக் கூறுகின்றனர்." என்றார்.
அவரது பெற்றொர் என்ன செய்து சம்பாதிக்கின்றனர் என்பதை அவர் இது வரை கூறியதில்லை.
இத்தனை இருந்தும் இந்த லேடி அருணசலத்தின் வீட்டில் வாஷிங் மிஷின் இல்லை. ஏனென்றால் அவர் ஒரு முறை உடுத்திய ஆடையை திரும்ப உடுத்துவதில்லையாம்.
"இவர் ஊதாரித்தனமாக இருக்கிறார், நிச்சயம் இவர் எதாவது வேலைக்கு செல்ல வேண்டும். கொஞ்சம் பொறுப்புடன் இருக்க வேண்டும். அப்பாவின் காசில் எவ்வளவு நாள் தான் இருப்பார்?" என ஒரு தரப்பும் "எனக்கும் இவரைப் போல வாழ வேண்டும்" என மற்றொரு தரப்பும் கமன்ட்டிக்குக் கொள்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust