ரஷ்ய அதிபர் புதின் மீது உக்ரைன் நேரடித் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா உக்ரைன் மீது குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 14 மாதங்களைக் கடந்து நடைபெற்றுவருகிறது. இந்த போரில் மொத்த உலகுக்கும் அதிர்ச்சிகரமான பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
உக்ரைனை ரஷ்யா மிக விரைவாக கைப்பற்றிவிடும் அல்லது தங்களுக்கு தேவையான பகுதிகளைக் கைப்பற்றியபிறகு போரை நிறுத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஒரு ஆண்டுக்கும் மேலாக தாக்குபிடித்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யா கூறியுள்ள குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. மேலும் ரஷ்யா இந்த போரை இன்னும் விரிவுபடுத்துவதற்கான சாக்குபோக்காக இந்த நாடகத்தை பயன்படுத்துகிறது எனவும் உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் தங்கும் இல்லத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதாக கிரிமிலின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகவும், ஜனாதிபதியின் உயிருக்கு எதிரான முயற்சியாகவும் நாங்கள் கருதுகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த போது புதின் அந்த கட்டடத்தில் இல்லை எனவும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்ரோன் தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆனால் இந்த ட்ரோன் தாக்குதல் எந்த ஊடகத்தாலும் விசாரணை செய்யப்படவில்லை.
உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. வேறெந்த அமைப்புகளும் இதுகுறித்துப் பேசவில்லை.
இது ரஷ்யாவின் உள்ளூர் எதிர்ப்புப் படைகளின் கொரில்லா தாக்குதலாக இருக்கலாம் என உக்ரைனின் ஜனாதிபதி ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறியுள்ளார்.
மாஸ்கோதரப்போ இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என உறுதியாக தெரிவித்திருக்கிறது.
இந்த சம்பவம் ரஷ்யாவினாலேயே நடத்தப்படவில்லை என்றால், ரஷ்ய அதிபரின் உயிருக்கு ஆபத்து இருப்பது உறுதி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust