இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற இடத்துக்கு கிறிஸ்தவர்களே செல்ல அஞ்சியது ஏன்?
இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற இடத்துக்கு கிறிஸ்தவர்களே செல்ல அஞ்சியது ஏன்? Twitter
உலகம்

இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற இடத்துக்கு கிறிஸ்தவர்களே செல்ல அஞ்சியது ஏன்?

Antony Ajay R

கிறிஸ்தவர்களே செல்ல பயப்படும் ஒரு தேவாலயம் உலகில் உள்ளது. யோர்தான் நதிக்கரையில் இருக்கும் அது வரலாற்று ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பார்ப்பதற்கு ஏதோ பேய் நகரம் போல பாழடைந்து சிதைந்துகிடக்கிறது.

Qasr El Yahud என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் திருமுழுக்கு யோவானால் இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்த இடத்தில் பல கைவிடப்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்வைக்கு பயமுறுத்துவதாக இருந்தாலும் இவை அனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என அறியும் போது வியப்பாக இருக்கிறது.

இந்த இடத்தில் திருமுழுக்கு பெற பலர் வந்து சென்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை யாருக்கும் இந்த பகுதி முழுவதும் பயணிக்க துணிவு இல்லை.

இஸ்ரேல் உருவானது முதலே அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல சண்டைகள் நடந்துள்ளது.

1960களில் இஸ்ரேலிய படையினர் இந்த இடத்தில் சுரங்கங்களைத் தோண்டி பல கண்ணிவெடிகளை வைத்தனர். போரில் பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. தேவாலயங்கள் சிதைந்தன.

இந்த இடம் அப்போது முதல் பேய் நகரம் போல காட்சியளிக்கத் தொடங்கியது. இங்குள்ள தேவாலயங்களுக்கு யாரும் வருவதில்லை. திருமுழுக்கு பெறும் சிறிய கோவிலைத் தவிர்த்து பிற தேவாலயங்கள், யூத வழிபாட்டுத்தளங்கள் ஆளரவம் அற்றுப்போயின.

2016ம் ஆண்டில் தான் ஒரு இங்கிலாந்து தன்னார்வலர் நிறுவனம் இங்குள்ள கன்னிவெடிகளை நீக்க முன்வந்தது. திருமுழுக்கு என்பது பாவங்களை கழுவி ஆன்மாவை சுத்தப்படுத்துவதாகும். இயேசு திருமுழுக்கு பெற்ற இடத்தில் இருந்து போர் எச்சங்களை அகற்றி சுத்தம் செய்திருக்கிறது அந்த குழு. இதனால் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் அந்த தலத்துக்கு வந்து செல்ல முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?