Qatar: இந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து தொடர்!விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அரபு தேசம்
Qatar: இந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து தொடர்!விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அரபு தேசம் Twitter
உலகம்

Qatar fifa: நூற்றாண்டின் சிறந்த கால்பந்து தொடர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அரபுதேசம்

Keerthanaa R

கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் இந்த வருடம் நடைபெறவிருந்ததை அடுத்து அரபு தேசம் எண்ணிலடங்கா சர்ச்சைகளை எதிர்கொண்டது.

ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளுக்காக பிரத்யேக மைதானங்கள் உருவாக்கப்பட்டன. கத்தார் நாட்டில் ஏற்கனவே நிலவும் கடும் கட்டுப்பாடுகளை போட்டியை காண வரும் ரசிகர்களுக்கும் விதித்திருந்தது அரசு.

மைதானத்திற்குள் மது தடை, அரசியல் விளம்பரங்களுக்கு தடை, நாகரீகமான உடைகள் தான் அணிய வேண்டும், ஓரினச்செர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் எந்த வித நடவடிக்கைகளும் இருக்க கூடாது, மைதானத்திற்குள் உணவுக்கு தடை என கண்டிஷன்களின் பட்டியல் நீண்டது.

இதை தவிர, உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை உலகக்கோப்பை தலைவரே தெரிவித்திருந்தார்

இதனால் கத்தார் அரசு கடும் விமர்சனங்களை சந்தித்தது.

எனினும், தற்போது உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், பலரும் கத்தாரின் இந்த கட்டுப்பாடுகளை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள்!

உலகக்கோப்பையை காண வந்திருந்த 19 வயது இளம் பெண் கூறுகையில், “என்னை போல இளம் பெண்களுக்கு கத்தார் ஒரு ஆபத்தான இடம் என நினைத்து நான் பயந்திருந்தேன்.

மதுவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. மஎலும் என்னுடன் துனைக்கு என் தந்தை வந்திருந்தார். அவர் வந்திருக்கவஏண்டிய அவசியம் இல்லை என்பது போல நான் உணர்ந்தேன்” என்றார்

மேலும் அவர், இங்கிலாந்தில் கால்பந்தாட்ட போட்டிகள் நடக்கும் போது, மைதானத்திற்கு பெண் ரசிகர்கள் வந்தால், பாலியல் வன்முறைகள், துபுறுத்தல்கள் இருக்கும் என்றும், ஆனால், அத்தகைய விஷயங்கள் எதுவும் கத்தாரில் நடைபெறவில்லை எனவும் தெரிவித்திருக்கிரார். மற்றொரு ரசிகையும், மைதானத்திற்குள் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டதால் மிகவும் அமைதியான சூழலை அவர் கத்தாரில் உனர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், கத்தாரில் நடைபெற்ற இந்த பருவத்தின் கால்பந்து தொடர் தான் இந்த நூற்றாண்டின் சிறந்த தொடர் என பிபிசி ஸ்போர்ட் நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் கடுமையான விதிமுறைகளை, உலகக்கோப்பையின் தொடக்கத்தில் பிபிசி விமர்சித்திருந்தது என கல்ஃப் நியூஸ் தளம் தெரிவிக்கிறது. இந்நிலையில், பொஅட்டிகள் முடிவடைந்த பின்னர், இதுவரை கால்பந்து உலகக்கோப்பை நடத்தப்பட்ட நாடுகளில் யார் சிறப்பாக செயலாற்றினர் என்ற வாக்கெடுப்பை மேற்கொண்டது பிபிசி ஸ்போர்ட்ஸ்.

78 சதவிகித ரசிகர்கள் கத்தாருக்கு தங்கள் ஆதரவை அளித்திருக்கின்றனர். அடுத்த இடத்தில் ஜப்பான்/தென் கொரியா இடம்பெற்றிருக்கிறது. ஆனால், ஜப்பான் நாட்டிற்கு கிடைத்த வாக்குகள் வெறும் 6 சதவிகிதம் தான்.

கணக்கெடுப்பின் முடிவுகள்:

  • கத்தார் (2022) - 78% வாக்குகள்

  • ஜப்பான் (2002) - 6%

  • பிரேசில் (2014) - 5%

  • ஜெர்மனி மற்றும் ரஷ்யா (2006 மற்றும் 2018) - 4%

  • தென் ஆப்பிரிக்கா (2010) 3%

விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள், எழுந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் அனைத்திற்கும் பெரும் பதிலடியாக வந்திருக்கிறது பிபிசியின் இந்த வாக்கெடுப்பு.

2022 உலகக்கோப்பையை மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. இது அர்ஜென்டினாவுக்கு மூன்றாவது உலகக்கோப்பை வெற்றி மற்றும் மெஸ்ஸிக்கு முதல் உலகக்கோப்பை வெற்றியாகும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?