நிர்வாணமாக சுற்றிய பெண்; கைது செய்ய வந்த போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது? ட்விட்டர்
உலகம்

நிர்வாணமாக சுற்றிய பெண்; கைது செய்ய வந்த போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது?

Keerthanaa R

அமெரிக்காவில் நிர்வாணமாக ஒரு பெண் சுற்றி வருவதாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவரை பிடிக்க சென்றபோது அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம், மங்கோலியா டிரைவ் பகுதியில் ஒரு பெண் நிர்வாணமாக சுற்றி வருவதாக கடந்த ஞாயிறு அன்று அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு போலீசார் விரைந்தனர். நிர்வாணமாக சுற்றித்திரிந்த பெண்ணை அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அப்பெண்ணின் பெயர் ஷரீ வில்லியம்ஸ் எனவும் அவருக்கு வயது 34 எனவும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இப்பெண்ணை தேடிச் சென்ற காவல் துறையினருக்கு ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளது. அப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்தது.

Dead

மற்றொரு புறம், ஷரி வில்லியம்ஸ் தான் கொலை செய்துவிட்டு தப்பிக்க நிர்வாணமாக சுற்றி திரிந்து நாடகமாடுகிறார் எனவும் போலீசார் சந்தேகித்தனர். இதனால் சந்தேகத்தின் பெயரில், கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் ஷரீ வில்லியம்ஸ்.

கடந்த திங்களன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. ஷரீ வில்லியம்ஸுக்கு ஜாமின் எதுவும் வழங்கப்படாத நிலையில், காவல் துறை கண்காணிப்பில் வைத்திருக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஷரீ தான் அப்பெண்ணை கொன்றாரா? கொலை செய்யப்பட்ட பெண் யார்? இறந்து கிடந்த பெண் உண்மையில் கொலை தான் செய்யப்பட்டார? என்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?