most haunted doll Twitter
உலகம்

உலகிலேயே பயங்கரமான 'பேய் பொம்மை' - அருங்காட்சியத்தில் வைக்க காரணம் என்ன?

Priyadharshini R

ராபர்ட் டால் உலகின் மிகவும் பயங்கரமான பேய் பொம்மை என்று அறியப்படுகிறது. கார் விபத்துக்கள் முதல் விவாகரத்து வரை பல சம்பவங்களை இந்த பொம்மை ஏற்படுத்தியதாக பலர் நம்புகின்றனர்.

இந்த பொம்மை 1905 ஆம் ஆண்டு ராபர்ட் யூஜின் ஓட்டோவிற்கு பணிப்பெண் ஒருவர் பரிசாக வழங்கப்பட்டது.

ராபர்ட் அந்த பொம்மைக்கு தனது பெயரின் பாதியை எடுத்து ஜீன் என்று பெயரிட்டார்.

அவரின் ஒரு நண்பராக ஜீன்னை பார்த்த ராபர்ட் செல்லும் இடமெங்கும் எடுத்துச் சென்றார். அதற்கென தனியறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்.

ஆனால் வீட்டிற்கு புதிதாக வருபவர்கள், அந்த பொம்மை மீது சந்தேகமடைந்தனர். எதோ மர்மம் இருப்பதாக உணர்ந்தனர்.

அந்த பொம்மை இருக்கும் வீட்டிற்கு முன்னால் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, ​​​​பொம்மை ஒரு ஜன்னலின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நகர்வதை மக்கள் பார்த்தார்கள்.

மேலும், வீட்டிற்குள், பொம்மை தன்னைத்தானே சுற்றி வந்ததாகவும் கூறுகின்றனர். ராபர்ட் மனைவி அந்த பொம்மையை வெறுத்தாலும், திருமணமான பிறகும் அந்த பொம்மை ராபர்ட்டின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது.

ராபர்ட் மற்றும் அவரது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, அந்த வீட்டை மிர்ட்டில் ராய்ட்டர் வாங்கினார், மேலும் அவர் ராபர்ட்டின் பராமரிப்பாளராக இருந்தார்.

ராய்ட்டர் பொம்மையை வைத்திருக்கும் போது பலர், அதன் காலடிச் சத்தங்களையும் சிரிப்பலையும் கேட்டதாகக் கூறியுள்ளனர்.

தற்போது அந்த பொம்மை கோரி கன்வெர்டிட்டோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராய்ட்டர் கூறுகையில் மர்ம கதைகள் எல்லாம் கூறுகின்றனர் சிலர் ஆனால் அப்படி ஒரு அனுபவமும் எனக்கு இல்லை என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?