US Twitter
உலகம்

Morning News Today: அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு? அலறிய மக்கள்

NewsSense Editorial Team

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஒன்றில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுக்கவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நியூயார்கில் உள்ள ஒரு உள்விளையாட்டு அரங்கில் குத்துசண்டை போட்டியின்போது பலத்த சத்தம் சிலருக்கு கேட்டிருக்கிறது. இதனால், சில ரசிகர்கள் துப்பாக்கிசூடு நடைபெறுவதாகக் கத்தினர்.

இதைக் கேட்ட மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக காவல்துறை அது வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ளனர்.

MK stalin

முதல்வர் ஸ்டாலினுடன் - ப.சிதம்பரம் சந்திப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க சார்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சித்து மூஸ்வாலா

பஞ்சாப் பாடகர் கொலை - கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்பு

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா (வயது 27). இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மன்சா தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் விஜய் சிங்லாவிடம் மூஸ்வாலா தோல்வி கண்டார்.

சில தினங்களுக்கு முன்பு இவர் தனது ஜீப்பில் ஜவகர் கே கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். உடன பாதுகாவலரை அழைத்துச் செல்லவில்லை. குண்டு துளைக்காத வாகனத்தையும் எடுத்துச் செல்லவில்லை. அப்போது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மூஸ்வாலாவுக்கு வழங்கி வந்த பாதுகாப்பினை பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, திரும்ப பெற்ற 2 நாட்களில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது எனக் கூறி, பஞ்சாப்பில் அந்த அரசை கலைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

சித்து படுகொலைக்கு கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றிருக்கிறார். சதீந்தர் சிங் என்ற பெயருடைய கோல்டி பிரார் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

OPS

படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் - ஓ.பி.எஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், படுகர் இன மக்கள் அளித்திருக்கிற ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில், பழங்குடியின மக்களான 'தோடர்' இன மக்களுடன் 'படுகர்' இன மக்கள் பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இந்தக் கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், எந்த அடிப்படையில் 'அதற்கு வாய்ப்பில்லை' என்று தமிழக வனத்துறை அமைச்சர் சொல்கிறார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு" எனத் தெரிவித்திருக்கிறார்.

IPL

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

பலரும் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?