ரஷ்யா: காதலியை 111 முறை குத்தி கொன்றவருக்கு விடுதலை கொடுத்த அதிபர் புதின் - ஏன்?
ரஷ்யா: காதலியை 111 முறை குத்தி கொன்றவருக்கு விடுதலை கொடுத்த அதிபர் புதின் - ஏன்? Twitter
உலகம்

ரஷ்யா: காதலியை கொடூரமாக கொன்ற இளைஞருக்கு விடுதலை கொடுத்த அதிபர் புதின் - ஏன்?

Antony Ajay R

தனது காதலியை 111 முறை கத்தியால் தாக்கிய இளைஞரை அதிகாரப்பூர்வமாக சிறையில் இருந்து விடுவித்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்களுடன் போராட தான் தயார் எனக் கூறியதால் விளாசிஸ்லாவ் கன்யுஸ் என்ற அந்த 27 வயது குற்றவாளியை விடுதலை செய்திருக்கிறார் புதின்.

கொலைக்குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் புதின் அவரை 6 மாதங்களில் குற்றப்பின்னணி இல்லாமல் இராணுவத்தில் சேர்த்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

காதலியாக இருந்த வேரா பெக்தெலேவா என்ற 23 வயது பெண் பிரிந்து போவதாக கூறிய பிறகு, கொலையாளி மூன்றரை மணிநேரம் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி மெதுமெதுவாக சித்திரவதை செய்து கொன்றுள்ளார்.

அவர் 111 முறை அந்த பெண்ணை கத்தியால் குத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கமிருந்தவர்கள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

காவல்துறை வருவதற்குள் இரும்பு வளையத்தால் அந்த பெண்ணை நெரித்து கொலை செய்திருந்தார் கொலையாளி விளாசிஸ்லாவ் கன்யுஸ்.

கொலையாளியை விடுவிக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவால் மனம் நொந்துபோயிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்.

"என் வாழ்க்கையும் நம்பிக்கையும் இந்த முடிவால் போய்விட்டது" என அந்த பெண்ணின் தாய் கூறியுள்ளார்.

மேலும், "அரசின் அநீதி என்னை சாவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறது" என்றும் "அவன் கையில் ஆயுதங்களைக் கொடுத்து போருக்கு அனுப்பியது ஏன்? அவன் மீண்டும் மனிதர்களை கிழித்து பெண்களை வன்கொடுமை செய்வான்" என்றும் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் ரஷ்ய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையம், "இது குறித்து அனைவரும் வெளிப்படையாக பேச வேண்டும். இப்போது இது நடைபெறுகிறது என்றால் நாளை குற்றவாளிகள் எந்த அச்சமும் இல்லாமல் வெளியில் நடமாடத்தொடங்கிவிடுவர்" எனக் கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?