வட கொரியா: ரூ.16 ஆயிரம் கோடி ஓட்டலுக்கு 25 ஆண்டுகளாக விருந்தினர்களே இல்லை! என்ன காரணம்? ட்விட்டர்
உலகம்

வட கொரியா: ரூ.16 ஆயிரம் கோடி ஓட்டலுக்கு 25 ஆண்டுகளாக விருந்தினர்களே இல்லை! என்ன காரணம்?

இந்த வானளாவிய 1,000 அடி உயர கட்டிடத்தில், 3000 தங்கும் அறைகளும், பானரோமா (360 டிகிரி) வடிவத்தில் ஐந்து சுழலும் உணவகங்களும் இருக்கும் வண்ணம் கட்டுமானம் திட்டமிடப்பட்டிருந்தது

Keerthanaa R

வட கொரியாவில் கட்டப்பட்டிருக்கும் ஓட்டல் ஒன்று சுமார் 25 ஆண்டுகளாக விருந்தினர்களே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான Ryugyong Hotel பல்லாயிரம் கோடி செலவு செய்து கட்டியும், உபயோகமற்றதாக இருக்கிறது.

எனினும் இந்த இடம் பிரபலமாகாமல் இல்லை. ஏன் இந்த ஓட்டலை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருக்கின்றனர்?

சி என் என், டெயிலி ஸ்டார் தளங்களின் அறிக்கையின்படி, வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங் பகுதியில் அமைந்திருக்கிறது Ryugyong Hotel. இந்த விடுதியின் கட்டுமானம் 1987ல் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் கட்டுமானத்தை முடித்து, மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வருவது தான் திட்டம்.

இந்த வானளாவிய 1,000 அடி உயர கட்டிடத்தில், 3000 தங்கும் அறைகளும், பானரோமா (360 டிகிரி) வடிவத்தில் ஐந்து சுழலும் உணவகங்களும் இருக்கும் வண்ணம் கட்டுமானம் திட்டமிடப்பட்டிருந்தது

ஆனால் இரண்டு ஆண்டுகளில் கட்டுமானம் நிறைவடையவில்லை. இதற்கு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

திட்டமிட்ட நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்திருக்கும். ஆனால் உலகின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற பெயரை தான் பெற்றிருக்கிறது.

1992ல் கட்டுமானம் தடையானபோது, ஜன்னல்கள் ஏதும் இல்லாமல், ஒரு வெற்றிடமாக தலைத் தூக்கி நின்றது Ryugyong Hotel. இன்று வரை இதன் கட்டுமானம் முடியவில்லை.

இதிலுள்ள லிஃப்ட் ஷாஃப்ட்கள் வளைந்திருக்கிறது, தளங்கள் சாய்மானமாக இருக்கிறது. 2011ல் வெளிப்புற கண்ணாடி பேனல்களை நிறுவினர். பிறகு 2013ல் கட்டிமுடிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனாலும் அது நடக்கவில்லை. கேட்பாரற்றே கிடக்கிறது இந்த கட்டிடம். இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து சுமார் 12 மைல் (19.3 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.

இதனாலேயே இந்த ஓட்டலை Hotel of Doom என்று அழைக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?