Salman Rushdie Twitter
உலகம்

சல்மான் ருஷ்டி: பிரபல ஆங்கில எழுத்தாளர் மீது தாக்குதல் - கண்ணை இழக்கும் சல்மான்?

நியூயார்க் நிகழ்ச்சி ஒன்றில் பேச வந்திருந்த ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர் ஒருவர் மேடையில் தாக்கினார். கழுத்து மற்றும் உடல்பகுதிகளில் கூர்மையான ஆயுதங்கொண்டு பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது.

Keerthanaa R

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி சர்ச்சைகளுக்கு பெயர்பெற்றவர். இவர் நியூயார்க்கில் சௌடாகுவா இன்ஸ்டிடியூஷனில் நடந்த கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தபோது மர்ம நபர் ஒருவர் மேடையில் சல்மானை தாக்கினார்.

கழுத்து மற்றும் உடல்பகுதிகளில் கூர்மையான ஆயுதங்கொண்டு பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சல்மான் ருஷ்டி ஆங்கில எழுத்தாளராவார். மும்பையில் பிறந்த இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் (Satanic Verses) என்ற புத்தகம் உலகளாவிய எதிர்ப்பை பெற்றது.

இஸ்லாமிய மதத்திற்கு எதிரான பல கருத்துகளை இந்த புத்தகத்தில் சல்மான் எழுதியிருந்ததாக கூறி சர்ச்சைகள், எதிர்ப்புகள் மற்றும் கொலை மிரட்டல்களை இவர் சந்தித்திருந்தார். இதனால் சல்மான் ருஷ்டி வெளிநாடுகளில் பதுங்கி வாழ்ந்துவந்தார்.

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக வந்திருந்த ருஷ்டியை ஒரு 24 வயது இளைஞர் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சல்மானை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பல முறை குத்தியதால், பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சல்மான் தனது ஒரு கண்ணை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக அவரது ஏஜன்ட் ஆண்ட்ரூ வைலி ஒரு மின்னஞ்சல் மூலம் AP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார்.

அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வென்டிலேட்டரில் சல்மான் இருப்பதாகவும், அவர் பேச முடியாத நிலையில் இருக்கிறார் என்றும் ஆண்ட்ரூ தெரிவித்தார்

தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேடையில் பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?