Space tourism program by ISRO: All you need to know  Twitter
உலகம்

ISRO : விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஆசையா? - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Priyadharshini R

பயணம் செய்வது பலருக்கு பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும், சிலர் மர்மமான இடங்களை தேடி பார்க்க பிடிக்கும், சிலருக்கோ ரம்மியமான இடங்களை காண பிடிக்கும்.

சிலருக்கோ விண்வெளி செல்ல ஆசை இருக்கும், அப்படி நினைப்பவர்களுக்கேற்ப விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்து செல்லும் தொழிநுட்பத்தை இஸ்ரோ சோதனை செய்து வருகிறது.

space

2030 இல் தொடங்க திட்டமிட்டுள்ள சுற்றுலா திட்டம் குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோம்நாத் கூறுகையில்,

இந்த பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் தொழில்நுட்பங்கள் இருக்கும்.

விரைவில் முழு அமைப்புகளும் உருவாக்கப்பட்டு சோதனைகளும் நடைபெறும்" என்றார்.

Space

அடுத்து விண்வெளிக்கு நம்மை அழைத்து செல்ல எவ்வளவு கட்டணம் ஆகும் என்று தானே யோசிக்கிறீர்கள்.

'இந்த விண்வெளி சுற்றுலாவிற்கு ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 6 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது சந்தையில் உள்ள மற்ற சுற்றுலா பயணத்தில் விலைகளை பொறுத்து மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கோடி டிக்கெட் கொடுத்து மேற்கொள்ளும் பயணம் எவ்வளவு தூரம் இருக்கும் என்ற ஆவல் அனைவருக்கும் எழுந்து இருக்கும்.

நிலவு வரை அழைத்துச்செல்வார்களா? என்ற பேராசை கூட இருக்கலாம்.

spacex, ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்கள் தங்கள் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் பூமியின் தரைமட்டத்தில் இருந்து வளிமண்டலத்தின் விளிம்பில் உள்ள துணை சுற்றுப்பாதையில் 15 நிமிடம் குறைந்த புவிஈர்ப்பு விசை நிலையை அனுபவிக்க அழைத்து செல்கிறது.

இஸ்ரோவின் விண்வெளி சுற்றுலாவும் கிட்டத்தட்ட இந்த அளவை தான் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான்

திட்டமும் விண்வெளி சுற்றுலா திட்டமும் ஒருங்கே வேகமாக நடைப்பெற்றுக்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?