இந்தியர்கள் இனி இலங்கையில் UPI மூலம் பணம் செலுத்தலாம்! Canva
உலகம்

இந்தியர்கள் இனி இலங்கையில் UPI மூலம் பணம் செலுத்தலாம்!

Priyadharshini R

சிறிய கடைகளில் கூட டிஜிட்டல் பண பரிமாற்றம் தான் நடக்கிறது. மக்கள் கையில் பணம் செலுத்துவதை விட டிஜிட்டல் முறையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் லையனில் நிற்காமல் நொடி பொழுதில் பணத்தை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் சிறந்த வழியாக உள்ளது டிஜிட்டல் பண பரிவர்த்தனை.

கூகுள் பே, போன் பே என யுபிஐ பரிமாற்றத்தின் மூலம் பணத்தை எளிதில் அனுப்பி கொள்கிறோம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களைப் பயன்படுத்தி விரைவில் யுபிஐ மூலம் பண வரித்தனை மேற்கொள்ளலாம்.

ஏற்கனவே பூட்டான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, ஹாங்காங், தைவான் உட்பட வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளில் QR-அடிப்படையிலான UPI கட்டணங்களை அனுமதிப்பதற்காக NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் (NIPL) லிக்விட் குழுமத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதன் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது. இந்த நடவடிக்கையானது, இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் உள்கட்டமைப்பை உலகளவில் அதிகரித்து வருவதையும் ஏற்றுக்கொள்வதையும் பிரதிபலிக்கிறது. இது எல்லை தாண்டிய ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?