ராஜபக்சே NewsSense
உலகம்

தகிக்கும் இலங்கை : விமான நிலையத்தை சுற்றி வளைத்த மக்கள், ராஜபக்சே வீட்டிற்கு தீ வைப்ப்பு

NewsSense Editorial Team

இலங்கை தகித்துக் கொண்டிருக்கிறது. போராட்டம் ஒரு மாத காலத்திற்கு மேலே நீடித்த சூழலில், நேற்று கொழும்பில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் வேறு நாடுகளுக்கு தப்பி செல்வதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடக்கிறது அங்கே?

இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் நேற்று சிலர் புகுந்து குழப்பம் விளைவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அரச தரப்பு முக்கியப்புள்ளிகள் நாட்டை விட்டு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இப்படியான சூழலில் தற்போது கொழும்பு ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sri Lanka

மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு தீ வைப்பு

போராட்டக் காரர்கள் மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைத்துள்ளதாகவும் இலங்கை ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியை இராஜிநாமா செய்வதாக மகிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்ட களத்திற்குள் வன்முறையை துண்டிவிட்ட நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைதியாக போராட்டத்தை தொடருங்கள்

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது அல்லது தனியார் சொத்துக்களை அழிக்காமல் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பில் நடத்தபட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

மேலும், “நாட்டு மக்களைக் காக்க முப்படைகளும் நிச்சயம் பாடுபடும். இந்த தருணத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து நிதானமாக இருக்க வேண்டும். தீ வைத்தல், பாரிய மோதல்கள் மற்றும் கொலை என்பவற்றில் ஈடுபட வேண்டாம். முடிந்தவை முடிந்து விட்டது. இனிமேல், முப்படையினர் என்ற வகையில் நாட்டு மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளார்.

தப்பி ஓட்டம்

இவ்வாறான சூழலில் நேற்று அதிகாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது மனைவி நேற்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோஷிதாவும் அவரது மனைவியும், கட்டுநாயக்க வானுார்தி தளத்தின் ஊடாக வெளிநாட்டுக்கு சென்றபோதும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.

வீடியோ உதவி : Lankasri, vikatan

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?