SuperShe Island: பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட இயற்கை சொர்க்கம்! SuperShe Island: பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட இயற்கை சொர்க்கம்!
உலகம்

SuperShe Island: பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட சொர்க்கம்!

Priyadharshini R

பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட தீவு ஒன்று இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? பின்லாந்தில் தான் அந்த அழகியசூப்பர்ஷீ தீவு இருக்கிறது. இந்த தீவு குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

பின்லாந்து தீவுக்கூட்டத்தின் நீர்நிலைகளுக்கு மத்தியில் அமைதி, ஓய்வு மற்றும் புத்துணர்ச்சியை விரும்பும் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சொர்க்கமாக இந்த சூப்பர்ஷீ தீவு உள்ளது.

இந்த தீவு ஆடம்பரம், சாகசம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக உள்ளது. இது இன்றைய பெண்கள் தங்களுடன் மீண்டும் இணைய விரும்பும் இடமாக உள்ளது.

இந்த தீவு தொழிலதிபர் கிறிஸ்டினா ரோத்தின் சிந்தனையில் உருவானது. பெண்கள் ஒரு சுதந்திரப் பறவையைப் போல் தாங்களாகவே இருக்கக்கூடிய பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்க விரும்பினார். தெற்கு பின்லாந்தில் உள்ள ராஸ்போரி கடற்கரையில் அமைந்துள்ள இந்த தீவு, 8.4 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது.

SuperShe Island பெண்கள் மட்டுமே அணுகக்கூடிய இடமாகும். இங்கு வரும் விருந்தினர்கள் பசுமையான காடுகள், பாறைகள், தெளிவான நீர் ஆகியவற்றின் காட்சிகளால் வரவேற்கப்படுகிறார்கள்.

இங்குள்ள தங்குமிடங்களும் ஆடம்பரமானவையாக உள்ளன. ஸ்டைலான வில்லாக்கள் முதல் பாரம்பரிய குடிசைகள் வரை தீவின் இயற்கைக்கு ஏற்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு அறையும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

SuperShe Island ஆரோக்கியத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மனம், உடல் மற்றும் ஆன்மா அனைத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

கடற்கரையில் யோகா, ஸ்பா, மசாஜ், ஃபேஷியல் என பெண் விருந்தினர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு ஆரோக்கிய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். தீவு தனிப்பட்ட வளர்ச்சியின் கலாச்சாரத்திலும் கவனம் செலுத்துகிறது.

SuperShe Island ஆனது அதன் பண்ணையிலிருந்து எடுத்து வரும் சாப்பாட்டு அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், SuperShe Island என்பது பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சொர்க்கம். அங்கு அவர்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம் மற்றும் அந்தந்த பயணங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கலாம். தீவில் ஏற்படக்கூடிய தொடர்புகள் அதன் கரைக்கு அப்பாலும் நீளுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?