சுவிச்சர்லாந்து முதல் மாலத்தீவு வரை : உலகிலேயே அழகான நிலப்பரப்பு எங்கிருக்கிறது? Canva
உலகம்

சுவிட்சர்லாந்து முதல் மாலத்தீவு வரை : உலகிலேயே அழகான நிலப்பரப்பு எங்கிருக்கிறது?

இந்தியா இதில் பன்முகத்தன்மை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பனி மலைகளும், பாலைவனமும், சதுப்புநிலக் காடுகளும், எழில் கொஞ்சும் தீவுகளும் இருக்கின்றன. ஒரே நாட்டில் பலவகையான நிலப்பரப்புகள் இருப்பது இந்தியாவில் மட்டுமே!

Antony Ajay R

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனித்த கலாச்சாரங்களையும், மொழிகளையும், பழக்கவழக்கங்களையும் பெற்றிருப்பது போல தனித்துவமான நில அமைப்பைப் பெற்றுள்ளன.

இந்தியா இதில் பன்முகத்தன்மை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பனி மலைகளும், பாலைவனமும், சதுப்புநிலக் காடுகளும், எழில் கொஞ்சும் தீவுகளும் இருக்கின்றன.

உலக நாடுகளில் மிகவும் அழகான நில அமைப்பைப் பெற்றுள்ள நாடுகள் எவை என இந்த பதிவில் காணலாம்.

நியூசிலாந்து

உலகம் முழுவதும் இருந்து இயற்கையை ரசிக்கும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் நியூசிலாந்து முன்னிலை வசிக்கிறது.
இங்கு உலகில் எங்கும் இல்லாத பலவிதமான உயிரினங்களைக் காணலாம். பனிப்பாறைகள், தீவுகள், கடற்கறைகள், பசுமையான காடுகள், நீண்ட புல்வெளிகள் என அழகுமிகுந்த நிலப்பரப்பை உடையது நியூசிலாந்து.

ஜப்பான்

வசந்த காலத்தில் சர்வதேச சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் இடமாக ஜப்பான் திகழ்கிறது.

இங்குள்ள மூங்கில் காடுகள், ஃபூஜி மலை, அழகிய கடற்கரைகள் அதிகமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன.

சுவிச்சர்லாந்து

சுவிச்சர்லாந்து நம்மால் முக்கியமான ஹனிமூன் ஸ்பாட்டாக மட்டுமே அறியப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வாழ வேண்டுமென்பது எந்த நாட்டில் வாழ்பவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும்.

அழகிய ஏரிகள், எளிமையான கிராமங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் என கண்களுக்கு விருந்தாகும் இந்த நாடு ஐரோப்பாவின் மொத்த அழகையும் கொண்டுள்ளது எனலாம்.

இத்தாலி

சர்வதேச சுற்றுலா செல்ல விரும்பும் எவருக்கும் பக்கெட் லிஸ்டில் இத்தாலியின் பெயர் இருக்கும். இத்தாலியின் கடற்கரைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

இங்கு பல பாரம்பரிய தலங்கள் இருக்கின்றன. இங்குள்ள இயற்கை அழகை ரசிப்பதுடன் சுவை மிகுந்த வைனையும் நாம் அனுபவிக்கலாம்.

மாலத்தீவுகள்

தமிழகத்தைப் பொருத்தவரையில் கொஞ்சம் பிரபலங்கள் அனைவரும் ஓய்வெடுக்கும் இடமாக திகழ்கிறது மாலத்தீவு. இங்குள்ள பீச்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

வைரம் போல பளபளப்பான தண்ணீரும், பால் போல வெண்மையான மணலும் புகைப்படங்களில் பார்க்கும் போதே கண்களைப் பறித்துவிடும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா


மாலத்தீவு போலவே ஆஸ்திரேலியாவும் அதன் கடற்கரைகளுக்காக பிரபலமானது. அதே நேரத்தில் பாலை வனத்தின் நடுவில் இருக்கும் பெரிய பாறைகளையும், பிரமிக்க வைக்கும் கட்டிடங்களையும் ஆஸ்திரேலியாவில் நாம் காண முடியும்.

பிரான்ஸ்

உலக அளவில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாடு பிரான்ஸ். பாரிஸ் நகரின் அழகை மட்டுமே திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
ஆனால் உண்மையில் பிரான்ஸ் மிகவும் அதியற்புதமான சுற்றுலாத்தலங்களைக் கொண்ட நாடு. இங்குள்ள மலைகளும் ஏரிகளும் யாவரையும் தன்னிலை மறந்து ரசிக்க வைத்துவிடும்.

northern light ( representational )

நார்வே


வடதுருவ நாடான நார்வே அதன் பனிமலைகளுக்கு பெயர்பெற்றது என்பதை நான் அறிவோம். இங்குள்ள இயற்கைக் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாகவும் மயிர்கூச்செறிய செய்வதாகவும் இருக்கும்.

உலகெங்கும் இருந்து மக்கள் நார்வேவுக்கு பயணிக்க காரணம் கவர்ச்சிகரமான வடதுருவ ஒளிதான்.


பூடான்



நம் அண்டை நாடான பூடான் இமயமலைத் தொடரை இந்தியாவுடன் பகிர்கிறது. இங்குள்ள மலைப்பிரதேசங்கள் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும்.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் தான் பூடானின் அழகை நிர்ணயிக்கின்றன எனலாம்.

Iceland


ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தில் வியக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. கருப்பு மனல் பீச்கள் மற்றும் நம்பமுடியாத நில அலைப்புகளைக் கொண்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?