Taylor Swift Twitter
உலகம்

Taylor Swift: ரூ.800 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாப் பாடகியின் பூனை? ஒரு அடடே தகவல்

பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் வளர்ப்பு பூனையான ஒலிவியா பென்ஸனின் சொத்து மதிப்பு 97 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில், 800 கோடி ரூபாய்க்கு மேல்.

Keerthanaa R

பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் பூனை தான் உலகின் மூன்றாவது வசதியான பூனை. அதன் சொத்து மதிப்பு ரூ.97 மில்லியன் டாலர்கள்

All About Cats டாட் காம் என்ற தளம் செல்ல பிராணிகளின் சொத்து மதிப்பை அவற்றின் இன்ஸ்டாகிராம் தரவுகளை வைத்து கணக்கிட்டது.

மேலும், Influence Marketing Hub என்ற கருவியை பயன்படுத்தி , ஒவ்வொரு செல்லபிராணியும் அதன் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் லைக்குகள் வைத்து எவ்வளவு பணம் சம்பாதிக்கும் என்ற கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இதன்படி, பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் வளர்ப்பு பூனையான ஒலிவியா பென்ஸனின் சொத்து மதிப்பு 97 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில், 800 கோடி ரூபாய்க்கு மேல்.

ஒலிவியா பென்சன் பூனைக்கு சொந்தமாக ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் கூட கிடையாது. பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அவர் வெளியிடும் பாடல் வீடியோக்களில் சில முறை தோன்றியிருக்கிறது.

ஒரு முறை தனது உரிமையாளர் டெயலருடன் டயட் கோக் மற்றும் ஸ்னீக்கர் விளம்பரங்களில் தோன்றியிருந்தது.

ஒலிவியா பென்சனை தவிர டெய்லர் ஸ்விஃப்ட்டிடம் இன்னும் இரண்டு பூனைகள் உள்ளன. ஆனால் அவை ஒலிவியாவின் அளவுக்கு பிரபலம் இல்லை.

இந்த உலகின் வசதியான செல்ல பிராணிகள் பட்டியலில் முதலிடத்தில் கன்தர் VI (500 மில்லியன் டாலர் மதிப்பு) என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் முதலிடத்திலும், நாலா (100 மில்லியன் டாலர் மதிப்பு) என்ற பூனை இரண்டாம் இடத்திலும் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?