ராணி பயன்படுத்திய Teabag (Rep) Twitter
உலகம்

Queen Elizabeth II: ராணி பயன்படுத்திய Teabag விற்பனை - என்ன விலை தெரியுமா?

மகாராணி பயன்படுத்திய பல பொருட்கள், அவரின் நினைவாக இணையத்தில் விற்கப்பட வந்தது. அதில் அவர் பயன்படுத்திய ஒரு Teabag-ம் அடக்கம்.

Keerthanaa R

மறைந்த இங்கிலாந்து ராணி பயன்படுத்திய டீ பேக் ebay ஷாப்பிங் தளத்தில் 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை என வந்துள்ள செய்தி கவனம் ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 அன்று உயிரிழந்தார். இவரது கணவரின் மறைவுக்கு பிறகு உடல் நலம் சற்று கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் அவர் காலமானார்.

Prince Charles

இவரது மகனும், இளவரசருமான சார்லஸ் அடுத்த இங்கிலாந்து அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராணியின் தனிப்பட்ட சொத்துக்கள் இனி இவருக்கு வரும் எனவும், மகாராணி ஆட்சிக் காலத்தில் அனுபவித்த சிறப்புச் சலுகைகளும் இவருக்கு கிட்டும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

மகாராணி பயன்படுத்திய பல பொருட்கள், அவரின் நினைவாக இணையத்தில் விற்கப்பட வந்தது. அதில் அவர் பயன்படுத்திய ஒரு Teabag-ம் அடக்கம்

1998 ஆம் ஆண்டு ராணி 'பயன்படுத்தியதாகக்' கூறப்படும் அந்த Teabag இணையத்தில் $12,000க்கு விற்கப்படவுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி தளம் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய். 1998ஆம் ஆண்டு ஒரு முறை Pest Control Drive நடத்தியபோது, வின்ட்சர் கோட்டையிலிருந்து அந்த டீ பேக் வெளியில் கடத்தப்பட்டதாகவும், தற்போது ராணியின் மறைவுக்கு பின்னர் விற்கப்படவுள்ளதாகவும் செய்தி தளம் கூறுகிறது.

ஆனால், இது நிஜமாகவே மகாராணி பயன்படுத்திய டீ பேக் தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்துள்ளது. இதனால் அது ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் தான் என உறுதி சான்றிதழும் கொடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த moo_4024 என்ற டிவிட்டர் பயனர் பகிர்ந்த அந்த சான்றிதழில் “பின்வரும் கூற்றுகள் முற்றிலும் உண்மை என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி தீர்மானித்துள்ளது, இது ஒரு தேநீர்ப் பை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடவே அவர், "வரலாற்றின் முக்கிய சின்னத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்! விலைமதிப்பற்றது" எனவும் தெரிவித்திருந்தார். இவற்றைத் தவிர மகாராணியின் கையெழுத்தும், அவர் பயன்படுத்திய பார்பீ பொம்மையும் விற்பனைக்கு வந்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?