மெட்டா  canva
உலகம்

பணிநீக்கம் செய்த மெட்டா: அமெரிக்க இந்தியர்களுக்கு உதவிய நல்லுள்ளங்கள்- ஓர் நெகிழ்ச்சி கதை!

தற்போது இந்த எச் 1 பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் யாரெல்லாம் லே ஆஃப் செய்யப்பட்டார்களோ, அவர்கள் அறுபது நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர்.

Keerthanaa R

பல குழப்பங்களுக்கு பிறகு ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய எலான் மஸ்க், வந்ததும் வராததுமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இவரைத் தொடர்ந்து பெரு நிறுவனங்களான மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் ஊழியர்களை லே ஆஃப் செய்தது.

இதனால், பல்லாயிரக் கணக்கான இந்தியர்களும் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர். மெட்டாவில் வேலை செய்த இளைஞர் ஒருவர், பணியில் சேர்வதற்காக இந்தியாவிலிருந்து கனடா சென்ற இரண்டே நாட்களில் லே ஆஃப் செய்யப்பட்டு நிர்கதியாக நின்றார்.

ட்விட்டர் மெட்டா போன்ற நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை மனதில் வைத்தே இந்த யுக்தியை கையாண்டுள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த நிறுவனங்களுக்காக இந்தியாவிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள், எச் 1 பி விசாவில் வெளிநாடுகளில் இருப்பவர்கள் என இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எச் 1 பி விசா என்பது தற்காலிக விசா ஆகும். இந்த விசா மூலம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களை அங்குள்ள நிறுவனங்கள் 6 வருடங்கள் வரை பணியமர்த்தலாம்.

தற்போது இந்த எச் 1 பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் யாரெல்லாம் லே ஆஃப் செய்யப்பட்டார்களோ, அவர்கள் அறுபது நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக பிபிசி தளத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், அங்கு பணியில் இருக்கும் மற்ற இந்தியர்கள், வேலை இழந்தவர்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய முன் வந்துள்ளனர்.

வேலை தேட உதவுவது, ஹயர் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பணி தேடுபவர்களுக்கு தகவல்களை பகிர்வது, அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் அவர்களுடன் பேசுவது போன்றவற்றை இவர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் இம்மிகிரேஷன் ஆலோசகர்கள், நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் என மூன்று தரப்பினரையும் இணைக்கும் முயற்சியிலும் இவர்கள் இறங்கியுள்ளனர்.

அப்படி எச் 1 பி விசாவில் வேலைபார்க்கும் இந்தியர்களான ஸ்ருதி ஆனந்த் மற்றும் விதி அகர்வால் வேலை தேடுபவர்களின் டேட்டா பேஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த டேட்டா பேஸ் இந்தியர்களை மீண்டும் தகுந்த வேலையில் சேர்க்க ஓர் எளிய கருவியாக அமைந்துள்ளது .

இது குறித்து பேசிய விதி மற்றும் ஸ்ருதி , “உலகின் தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், லே ஆஃப் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கின்றனர்” என்றனர்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நன்கு படித்த, திறமைமிக்க, நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்த பணியாளர்களே பெரும்பாலும் லே ஆஃப் செய்யப்பட்டுள்ளனர்.

“சரியான நிறுவனத்திற்கு, சரியான நபரிடம், சரியான நேரத்திற்கு இவர்களது ரெஸ்யூம்கள் சென்று சேரவேண்டும் என்பதே எங்களது முயற்சியின் குறிக்கோள்.

நேரமின்மையை புரிந்துகொண்ட மேலாளர்களும், வழக்கத்தைவிட வேகமாகவே இன்டெர்வியூக்கள் வைத்து, பணியமர்த்தும் வேலையை துரிதப்படுத்தி வருகின்றனர்” என்றனர்.

6 வருடங்களுக்கு முன் வேலைக்காக அமெரிக்கா சென்ற அமித் என்பவர் சமீபத்திய லே ஆஃபால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். மிகவும் எளிமையான, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பின்புலத்திலிருந்து வந்த அமித், தன்னை நம்பியே தனது குடும்பம் இருப்பதாக கூறினார்.

வேலை தேடி வரும் அமித், இந்த சூழலில், சக இந்தியர்களின் இந்த உதவி, பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வேலை இழந்த இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு நிகழ்ச்சிகள், தற்காலிக விசா, ஊழியர் உரிமைகள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஆலோசகர்களுடனான சந்திப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்துகொடுத்து வருகின்றனர்.

வடக்கு கலிபோர்னியாவில், ஐஐடி பே ஏரியா முன்னாள் மாணவர்கள் சங்கம், விசா கொள்கைகள், பணியாளர் உரிமைகள் மற்றும் பிற சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ Ask Me Anything நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

ஐஐடி பே ஏரியா சங்கத்தின் போர்ட் உறுப்பினரும், மெட்டா நிறுவனத்தின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டீமில் இருப்பவருமான தர்மேஷ ஜனி என்பவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?