நேற்று நீங்கள் எப்படி இருந்தீர்கள்? நீங்கள் சிரித்தீர்களா அல்லது சின்ன புன்னகையாவது முகத்திலிருந்ததா? உங்களுக்கு விருப்பமான எதையாவது செய்தீர்களா? ஏதேனும் புதிதாகக் கற்றுக்கொண்டீர்களா? கோபமாக இருந்தீர்களா? கவலையாக இருந்தீர்களா?
ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய வாக்குப்பதிவு நிறுவனமான கேலப், 140க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களிடம் உணர்வுகள் குறித்தும் நல்வாழ்வு குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வை செய்கிறது. அதில் ஒரு பகுதியாக இந்தக் கேள்விகளும் பிற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
மேலும், கற்பனை மூலமும் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. 5 ஆண்டுகளில் உங்களின் நிலை என்னவாக இருக்கும்? உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? போன்ற பல கேள்விகளின் பதில்கள் மூலமாக, மக்கள் செழிப்பாக இருக்கிறார்களா, போராடுகிறார்களா, துன்பப்படுகிறார்களா என்பதைக் கணிக்கிறது.
Sad People
கொரோனா காலம், போர் போன்ற மோசமான சூழல்களிலும் இந்த மகிழ்ச்சியை அளவிடும் ரிப்போர்ட்கள் சின்ன சந்தோஷத்தைத் தரத்தான் செய்கின்றன… இருண்ட பாதையில் ஒரு சின்ன வெளிச்சம் தெரிவது போன்ற மகிழ்ச்சியை இந்த ரிப்போர்ட் தரத்தான் செய்கிறது.
இந்தத் தொற்றுநோய் காலத்தில் வறுமை அதிகரித்தன. பசியின் கொடுமைகளும் அதிகரித்துள்ளன. அரசாங்க ஆதரவில் உள்ள இடைவெளிகளை நிரப்ப பரஸ்பர உதவிகளைச் செய்யும் நெட்வொர்க்குகள் புதிதாகத் தோன்றியுள்ளன.
உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நியர்களுக்கு உதவுதல், தன்னார்வத் தொண்டு செய்தல் மற்றும் சில காரணங்களுக்காகவும் தனிநபர்களுக்காகவும் நன்கொடை அளிப்பது போன்றவை கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 25% அதிகரித்துள்ளன.
“குறிப்பாக அந்நியர்களுக்கு உதவி செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள் சிலர். இந்தக் கருணை பண்பு, உதவி தேவைப்படும் மக்களுக்குப் பெருந்துணையாக உள்ளது. இந்தச் செயல்பாட்டில் உதவி செய்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் அதிக மகிழ்ச்சியையும் தருகிறது. மற்றவர்கள் இதைப் பின்பற்றுவதற்கான நல்ல முன்மாதிரிகளாகவும் சிலர் திகழ்கின்றனர். இது சிலருக்கு சிறந்த வாழ்க்கையையும் உருவாக்குகிறது” என ஜான் ஹெலிவெல் ரிப்போர்ட்டில் வெளியிட்டு இருக்கிறார்.
“பல நாடுகள், தங்கள் மக்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வருகின்றன” என ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது.
World
உதாரணமாக, நியூசிலாந்து இப்போது புதிய கொள்கைகளைக் கருத்தில் கொள்ளும்போது, உள்நாட்டின் உற்பத்தியை விட மனித நல்வாழ்வுக்கு அதிகம் கவனம் செலுத்துவது மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம். சில நாடுகள் பொது நலனை மையப்படுத்துவதில் மற்றவர்களை விட மிகச் சிறந்த வேலையைச் செய்கின்றன. இது பெரும்பாலும் உலக மகிழ்ச்சி அறிக்கையில் பிரதிபலிக்கிறது. “பகுப்பாய்வில் உயர்ந்த இடத்தில் உள்ள நாடுகளில் உள்ள மக்கள், தங்களது அரசாங்கங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
“மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்தப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்காக அல்ல… நீண்ட காலத்திற்கு முன்பே பெரிய ஞானிகள் வலியுறுத்தியபடி அரசியல் இயக்கப்பட வேண்டும்.” என்று பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் அவர்கள் கூறியுள்ளார். இவர் இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியரும்கூட…
உலக மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள நாடுகள் அனைத்தும் வலுவான நலத்திட்டங்களையும் குறைந்த அளவிலான சமத்துவமின்மையையும் கொண்டுள்ளன. இதற்கிடையில், மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள நாடுகளில், அதிக அளவு வறுமை சூழ்ந்துள்ளது.
பெர்டெல்ஸ்மேன் அறக்கட்டளையின் அறிக்கையின்படி, “தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக உயர்ந்த தரவரிசையில் உள்ள நாடான ஃபின்லாந்து, உலகின் வலிமையான சமூகப் பாதுகாப்பு கொண்டுள்ள நாட்டில் ஒன்றாகும். கல்வி இல்லாதது, குழந்தைகள் வறுமை ஆகியவற்றை மிக குறைந்த அளவிலே கொண்டுள்ளது. மேலும், வேலை - தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கும் இந்த நாடு முன்னுரிமை அளிக்கிறது. மக்கள் தங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்வதற்கும் மற்றும் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப தங்கள் நேரத்தை வடிவமைக்கவும் இந்நாடு அனுமதிக்கிறது.
மகிழ்ச்சிக்கான தரவரிசையில் மிகக் குறைந்த நாடான ஆப்கானிஸ்தான் நாடே இடம் பெற்றுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் போரால் அழிக்கப்பட்டு, போர் சூழலால் அவதிப்பட்டு, மோசமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தான் .
ஆகஸ்ட் 2021-ல், 2001-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை உறுதிப்படுத்தியபோது, பெண்களும் பிற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களும் மோசமான, அதிக ஆபத்தை எதிர்கொண்டனர் என்பது பெரும்பாலானோர் அறிந்த செய்தி.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியற்ற 10 நாடுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
Happy People
1. ஃபின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. சுவிட்சர்லாந்து
5. நெதர்லாந்து
6. லக்சம்பர்க்
7. ஸ்வீடன்
8. நார்வே
9. இஸ்ரேல்
10. நியூசிலாந்து
137. ஜாம்பியா
138. மலாவி
139. டான்சானியா
140. சியரா லியோன்
141. லெசோதோ
142. போட்ஸ்வானா
143. ருவாண்டா
144. ஜிம்பாப்வே
145. லெபனான்
146. ஆப்கானிஸ்தான்
India
இந்திய நாட்டின் இடம் என்ன தெரியுமா? 136-வது இடம்… 2021-ம் ஆண்டு எடுத்த சர்வேயில் 139-வது இடத்தில் இருந்தது. தற்போது 3 படி மேலே ஏறி 2022-ம் ஆண்டு எடுத்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், 136-வது இடத்தைப் பிடித்துள்ளது.