ஜப்பான்: 70 ஆண்டுகள் வாழும்; கோடிக்கணக்கில் விலை- 'கொய் மீன்கள்' புனிதமா கருதப்படுவது ஏன்? Twitter
உலகம்

ஜப்பான்: 70 ஆண்டுகள் வாழும்; கோடிக்கணக்கில் விலை- 'கொய் மீன்கள்' புனிதமா கருதப்படுவது ஏன்?

ஜப்பான் கலாச்சாரத்தில் இந்த கொய் மீன்கள் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்றன என்றால் மிகையாகாது. ஆனால் இந்த சாதாரண வண்ண மீன்கள் இப்படிக் கொண்டாடப்படுவது ஏன்? அவை எப்படி ஜப்பானின் சிறப்பாக திகழ்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

Antony Ajay R

கொய் கார்ப் மீன்களை நாம் சில அக்வாரியம்களில் மட்டுமே பார்த்திருப்போம். அதிகபட்சமாக சிலர் ஒன்றிரண்டை வளர்த்திருப்போம். இந்த கொய் மீன்களுக்கு நிஷிகிகோய் என்ற பெயரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் அபூர்வமாகவே பார்க்கும் கொய் மீன்களை ஜப்பானில் திரும்பியப் பக்கமெல்லாம் பார்க்க முடியும். புனித தலங்கள், தோட்டங்கள், குளங்கள் எல்லாம் கொய் மீன்கள் நிரம்பி வழிகின்றன.

ஜப்பான் கலாச்சாரத்தில் இந்த கொய் மீன்கள் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்றன என்றால் மிகையாகாது. ஆனால் இந்த சாதாரண வண்ண மீன்கள் இப்படிக் கொண்டாடப்படுவது ஏன்? அவை எப்படி ஜப்பானின் சிறப்பாக திகழ்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

கொய் மீன்கள் என்றால் என்ன?

கொய் ஒரு நன்னீர் மீன் வகை ஆகும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களிலும் வாழும்.

பல வண்ணங்களில் இருக்கும் இவற்றில் வெள்ளை மற்றும் சிகப்பு கலந்த மீன்கள் சிறப்பு வாய்ந்தவை. பிறந்த 3 ஆண்டுகளில் 15 இன்ச் வரை வளரும் இந்த மீன்கள் 25 - 35 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை.

தண்ணீரில் இருக்கும் மீன்கள், நத்தைகள், நண்டுகள், பூச்சிகளின் லார்வாக்கள், தாவர உணவுகள், பூச்சிகள் மற்றும் பழங்கள் என தண்ணீரில் எது கிடைத்தாலும் கொய் மீன்கள் உண்ணும்.

ஜப்பானில் கொய் மீன்கள்

ஜப்பானியர்கள் கொய் மீன்கள் மீது அதிகமாகவே அன்பு செலுத்தக்காரணம் அவற்றை வலிமை மற்றும் வெற்றியின் அடையாளமாக பார்ப்பது தான்.

அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நீண்ட ஆயுள் ஆகிய நல்ல விளைவுகளின் அடையாளமாகவும் கொய் மீன்களைப் பார்க்கின்றனர்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் தோன்றிய கொய் மீன்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் ஜப்பான் வந்தடைந்தன.

19ம் நூற்றாண்டில் தான் ஜப்பானில் உணவாக கொய் மீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்கள் கொய் மீன்களை விரும்பி இனப் பெருக்கம் செய்தனர்.

இருப்பினும் கொய் மீன்களை மக்கள் அன்பு செய்ய சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

வலிமை

கொய் மீன்கள் தண்ணீரில் வாழும் உயிரினங்களில் வலிமையான ஒன்றாகும். எவ்வளவு குளிரான நீரிலும் இவை வேகமாக நீந்தும். மற்ற மீன்களை விட பெரிதாகவும் உறுதியானதாகவும் இருக்கும். நீண்ட ஆயுளுடன் வாழக் கூடியது. இந்த காரணிகளால் அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தை அடையாளப்படுத்துவதாக கொய் பார்க்கப்படுகிறது.

நீண்ட ஆயுள்

கொய் மீன்களின் குறைந்தபட்ச ஆயுட்காலம் 20 ஆண்டுகளுக்கு மேல். அதிகபட்சமாக 70 ஆண்டுகள் கூட கொய் மீன் வாழும் என்கின்றனர்.தொட்டியில் அடைக்கப்பட்ட கொய் மீனுக்கும் காடுகளில் இருக்கும் கொய் மீனுக்கும் ஆயுள் காலம் வித்தியாசப்படுமாம். நீண்ட ஆயுளின் அடையாளமாக கொய் மீன்கள் பார்க்கப்படுகிறது.

புராணக்கதை

சீனா மற்றும் ஜப்பானில் கொய் மீன் குறித்து ஒரு புராணக்கதைக் கூறப்படுகிறது.

கொய் மீன் மிகவும் வலிமையானது. எந்த அளவு என்றால் அதனால் அருவில் ஏறுமுகமாக கூட நீந்தி மேலே சென்றுவிட முடியுமாம்.

ஆனால் அப்படி மேலே செல்லுவதற்கு கொய் மீன்கள் பல தடைகளை சந்திக்க நேரிடும். சவால்களை சந்திக்கும் உறுதி, விடா முயற்ச்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மீன்கள் அருவிக்கு மேலே சென்று டிராகனாக மாறுகின்றன என்று அந்த புராணக்கதைகள் கூறுகின்றன.

இது ஒருவர் வெற்றி பெற பல தடைகளைக் கடக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக கூறப்பட்ட கதை.

கொய் மீனின் நிறமும் மதிப்பும்

கொய் மீன்களுக்கு பொதுவான நிறம் கிடையாது. சில வெள்ளை நிறத்தில் இருக்கும், வெள்ளையில் சிகப்பு கலந்து சில, வெள்ளை சிகப்பு பழுப்பு கலந்து, அல்லது மஞ்சள் நிறத்தில் சில முழு மஞ்சள் கொய் மீன்கள் நீரில் தங்கம் போல ஜொலிக்கும். கொய் மீன்களை நீந்தும் ஆபரணங்கள் என்று கூறுகின்றனர்.

அழகான கொய் மீன்களை தேடிப்பிடித்து வளர்ப்பதும் உற்பத்தி செய்வது ஜப்பானியர்களின் வழக்கம். 2017ம் ஆண்டு ஒரு அழகான கொய் மீன் 200 மில்லியன் யென்-க்கு விலைபோனது. இந்திய மதிப்பில் 14 கோடி.

ஆனால் சாதாரணமாக ஒரு கொய் மீன் மதிப்பு 300 ரூபாய் தான்.

அழகான கொய் மீன்களை இனப் பெருக்கம் செய்வது தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக போட்டிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?