நம்முடைய அன்றாட தேவை, உண்ண உணவு, உடுத்த உடை, தங்க ஓர் இருப்பிடம். இவை தவிர்த்து மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற சில அத்தியாவசிய செலவுகளும் உண்டு.
அதனை தவிர பிற செலவுகளையும் நாம் செய்கிறோம். செலவுகள் அனைத்துமே இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் வசிப்பவரின் ஒரு நாள் செலவும், இந்தியாவில் வாசிப்பவரின் ஒரு நாள் செலவும் ஒன்றாக இருக்காது.
அதேபோல இந்தியா என்று எடுத்துக்கொண்டால் மும்பைக்கும் சென்னைக்கும் செலவு விகிதம் வெவ்வேறாக இருக்கும். அப்படி உலகெங்கிலும் விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சீனாவில் உள்ள இந்த தீவு நகரம் உயரமான வானளாவிய கட்டிடங்கள், கலாச்சார விழாக்கள், அற்புதமான உணவுகளுக்காக அறியப்படுகிறது. ஹாங்காங்கில் உள்ள எல்லாவற்றுக்கும், குறிப்பாக வீடுகளின் விலையில் அதிகமாக இருக்கும்.
ஒரு கப் காபியின் விலை $5 ( ரூ.414) ஆகவும், ஒரு தக்காளியின் விலை $11 (ரூ.911) ஆகவும் இருக்கும் ஹாங்காங் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
வீடுகள், ஆடைகள், மதுபானம் ஆகியவற்றின் அதிக விலை காரணமாக சிங்கப்பூர் பெரும்பாலும் இத்தகைய பட்டியல்களில் இடம் பிடிக்கிறது.
கார்கள் மீதான கடுமையான அரசாங்கக் கட்டுப்பாட்டின் காரணமாக இது உலகின் அதிக போக்குவரத்து விலைவாசியுள்ள நாடாக திகழ்கிறது.
இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை கிட்டதட்ட $1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
தூங்கா நகரம் என்றழைக்கப்படும் நியூயார்க் நகரம் உலகின் மிகப்பெரிய நகர்ப்புற பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இங்கு 340,000 மில்லியனர்களுக்கு மேல் உள்ளனர்.
விலைவாசி அதிகமாக இருக்கும். இங்கு வாடகைக்கு எல்லாம் வீடு எடுப்பது என்பது சாத்தியமற்றது. சராசரி மாத வாடகை $4,614 ஐ (இந்திய மதிப்பில் 3 லட்சத்து 80 ஆயிரத்தை) எட்டுகிறது!
உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாகவும் மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகவும் பாரிஸ் உள்ளது. ஒளி நகரம் என்று அழைக்கப்படும் பாரிஸ், வளமான வரலாறு, கட்டிடக்கலை மற்றும் சுவையான உணவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் சராசரியாக $2,200 (ரூ.1,82,300) ஒரு மாதத்திற்கு நகர மையத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு செலுத்துகிறார்கள்.
இங்கு மளிகைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகமாக இருந்தாலும், மது மலிவாக இருக்குமாம்.
தேநீர் கூட இங்கு அதிக விலைக்கு போகும். லண்டன் உலகின் மிக அதிக விலையுள்ள நகரங்களில் ஒன்றாகும். லண்டனில் சிக்கனமாக வாழ்வதற்கான இடத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். நகரத்துக்கு வெளியேயும் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை மாதத்திற்கு $1,800 ( 1 லட்சத்து 50 ஆயிரம்) ஆகும்.
3.3 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான துபாய், அதிக விலைவாசி உள்ள நகரமாக உள்ளது.
நகரத்தில் உயரும் வாடகை, பல குடியிருப்பாளர்களின் விலைவாசிக்கு காரணமாகிறது. 2023 இல் சராசரி வாடகை 28.5% அதிகரித்துள்ளது. சிலர் தங்கள் வாடகையை 50% அதிகரித்துள்ளனர். மளிகை சாமான்களின் விலை இங்கு அதிகம். துபாய் பெரும்பாலான உணவுகளை இறக்குமதி செய்வதால், அவற்றின் விலை இங்கு அதிகமாகவே இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust