Lonar Lake canva
உலகம்

Lonar Lake: திசைகாட்டி வேலை செய்யாத மர்ம இடம்; இந்த ஏரியில் அப்படி என்ன தான் இருக்கிறது?

விஞ்ஞானிகள் இந்த இடத்தை ஆய்வு செய்த போது இந்த ஏரியில் இருக்கும் கரை பகுதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புடன் ஒத்து போவதாக கூறுகின்றனர். மேலும் இந்த ஏரியின் நீரை ஆய்வு செய்யும்போது மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

Priyadharshini R

இந்த உலகம் பல்வேறு மர்மமான விஷயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. அப்படி மர்மங்களுக்கு பெயர் போன இடம் தான் மகாராஷ்ராவில் உள்ள லோனார் ஏரி. இந்த ஏரி உருவானதற்கு பல கதைகள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

லோனார் ஏரியின் புராணக்கதை

மகாராஷ்ராவின் ஔரங்காபாத்தில் இருந்து 170 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த லோனார் ஏரி. சதுப்பு நிலதன்மையுடனும் புதைமணலுடனும் காணப்படும் இந்த ஏரிக்கு ஒரு புராணக்கதை உள்ளது.

மக்களை துன்புறுத்திய லோனாசுரன் என்ற அரக்கரை விஷ்ணு தோற்கடித்தப் போது இந்த ஏரி உருவானது என்று இங்கு உள்ள உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். ஆகவே இந்த ஏரியை லோனார் ஏரி என்று அழைக்கின்றனர்.

விண்கல்லால் உருவான ஏரி

ஆராய்ச்சியாளர்களின் கருத்துபடி சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது சிறு கோள் மோதியதால் இந்த ஏரி உருவானதாகவும் கூறுகின்றனர். இந்த ஏரியில் ஏராளமான தாது பொருட்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

நிறம் மாறும் அதிசயம்

ஏராளமான தாது பொருட்கள் இருப்பதற்கு உதாரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு லோனார் ஏரி பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. ஏரியில் இருக்கும் பாறைகள் மற்றும் பாசிகளில் ஏற்பட்ட மாற்றம் தான் நிறம் மாற காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திசைகாட்டி வேலை செய்யாத இடம்

லோனார் ஏரிக்கு அருகில் திசைக்காட்டிகள் வேலை செய்யாது என கூறப்படுகிறது. இதற்கு காரணம் அசாதாரண மின்காந்த அலைகள் மின்சார உபகரணங்களுடன் தொடர்புகொள்வதால், ஏரியின் விண்கல்-தாக்கம் இருப்பதால் திசைகாட்டிகள் துல்லியமான வழியினை காண்பிக்காது என கூறப்படுகிறது. இப்படி ஒருபுறம் கூறிவந்தாலும் இதற்கான உறுதியான காரணம் இன்னும் மர்மாகவே உள்ளது.

சர்வதேச அங்கீகாரம்

அதே போல் விஞ்ஞானிகள் இந்த இடத்தை ஆய்வு செய்த போது இந்த ஏரியில் இருக்கும் கரை பகுதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புடன் ஒத்து போவதாக கூறுகின்றனர். மேலும் இந்த ஏரியின் நீரை ஆய்வு செய்யும்போது மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு பல ஆச்சரியங்கள் இருப்பதால் தற்போது லோனார் ஏரி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் (ramsar) பகுதியாக உள்ளது. எனவே ஏரியினை பாதுகாக்கவும் பராமரிக்கவும் சர்வதேச நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?