Ukraine Russia War

 

Twitter

உலகம்

உக்ரைன் ரசியா போர் : கொத்து கொத்தாக கொல்லப்படும் மக்கள் - தற்போதைய நிலவரம்

நிலம், வானம், கடல் என அனைத்து வழிகளிலும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரசியா துவங்கி விட்டது

Newsensetn

நிலம், வானம், கடல் என அனைத்து வழிகளிலும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரசியா துவங்கி விட்டது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாடு இன்னொரு நாட்டைத் தாக்கும் பெரும் போர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தாக்குதலில் டஜன் கணக்கிலானோர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இறப்பு நாடு முழுவதும் நடந்திருப்பதாகவம் அவர்கள் கூறுகின்றனர். தலைநகரம் கியிவிலும், மற் நகரங்களிலும் பெரும் குண்டுகள், ஏவகணைகள் வீசப்பட்டிருக்கின்றன. உக்ரைனின் சுகாதாரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி வியாழன் இரவு வரையிலும் 57 பேர்கள் கொல்லப்பட்டும், 169 பேர்கள் காயமடைந்திருக்கின்றனர்.

Ukraine Army

ரசியா டாங்குகள்

ரசியாவின் நான்கு டாங்குகளை அழித்திருப்பதாகவும், 50 ரசியத் துருப்புகளை கொன்றிருப்பதாகவும், லூஹான்ஸ்க் பகுதியில் ஆறு ரசிய விமானங்களை வீழ்த்தியிருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியிருக்கிறது. ஆனால் ரசியா இதை மறுத்திருக்கிறது. ரசிய ஆதவரவு கிளர்ச்சியாளர்கள் இரண்டு உக்ரைன் விமானங்களை வீழ்த்தியதாக கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த போர் தாக்குதல் மற்றும் பலி பற்றிய உண்மைத் தன்மை இப்போதைக்கு யாருக்கும் தெரியாது.

வியாழனன்று தொலைக்காட்சியில் உரையாற்றி ரசிய அதிபர் புடின், சிறப்பு இராணுவ நடவடிக்கையை அங்கீகரித்ததாக கூறியதை அடுத்து இராணுவத் தாக்குதல் துவங்கியிருக்கிறது. கிழக்கு உக்ரைனின் லூஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ் பகுதியை வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்கள் உதவி கேட்டதை அடுத்து இந்த தாக்குதலை துவங்கியதாக ரசியா கூறுகிறது.

ரசிய ஏவுகணைகள் உக்ரைன் நகரங்கள் மீது தாக்கி வருகின்றன. உக்ரைன் அரசு தகவல் படி ரசிய துருப்புகள் உக்ரைன் எல்லையின் அனைத்து பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான துருப்புகள் நுழைந்து தாக்கி வருகின்றன. கிழக்கில் இருக்கும் செர்னிஹிவ், கார்கிவ், லூஹான்ஸ்க் பகுதிகளிலும், தெற்கில் இருக்கும் கடற்கரை நகரங்களான ஒடேசா மற்றும் மாரிபோல் நகரங்கள் வழியாகவம் ரசியா நுழைந்திருக்கிறது.

ரசியாவிற்கு ஆதரவளிக்கும் பெலாரஸ் நாட்டிலிருந்தும் ரசியா தாக்கி வருகிறது. அதே போன்று கிரிமியாவிலிருந்தும் தாக்குவதாக உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன.

Ukrainian President Volodymyr Zelensky

பொழியும் குண்டு மழை

உக்ரைனின் தலைநகர் கியிவில் ஆங்காங்கே குண்டுகள் பொழியப்படுகின்றன. அதன் முதன்மை விமானநிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. போர் அபாய சங்குகள் நகரம் முழுவதும் ஒலிக்கின்றன.

உக்ரைனின் அதிபர் செலான்ஸ்கி நாட்டில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார். உலகத் தலைவர்கள் ரசியா மீதும் புடின் மீதும் வாய்ப்புள்ள அனைத்து தடைகளையும் விதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரசிய அதிபர் உக்ரைனை அழிப்பதை விரும்புவதாக அவர் கூறினார்.

டிவிட்டரில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, “அமைதியான உக்ரைன் நகரங்கள் தாக்கப்படுகின்றன. இது ஒரு ஆக்கிரமிப்பு போர். உக்ரைன் தன்னை தற்காத்துக் கொண்டு இந்தப் போரில் வெல்லும். உலகம் புடினின் இந்த நடவடிக்கையை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இது உடனடியாக செயல்படவேண்டிய தருணமிது" என்று கூறியிருக்கிறார்.

ரசிய அதிபர் புடினோ இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார். மக்களையும், ரசியக் குடிமக்களையும் உக்ரைனின் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காகவே இந்த போர் நடவடிக்கை என்கிறார். இது குறித்து மேற்குல நாடுகள் வெகு காலமாக அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றன என்கிறார்.

உக்ரைனின் இராணுவத் தளங்களை கைப்பறியதாவும், அதன் விமானத்தளங்கள் மற்றும் விமானத் தாக்குதல் எதிர்ப்பு அமைப்புகளை முடக்கியதாகவும் ரசிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

Vladimir Putin

பயணிகள் விமானம் பறக்க தடை

உக்ரைன் தனது வான்வெளியை சிவில் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்திருக்கிறது. அதே போன்று ரசியாவும் உக்ரைன் எல்லையில் உள்நாட்டு சிவில் விமானங்கள் பறப்பதை மார்ச் 2 வரை நிறுத்தி வைத்திருக்கிறது.

ரசிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைனில் இரண்டு நகரங்களை கைப்பற்றியதாக செய்தி ஏஜென்சிகள் கூறுகின்றன.

வியாழனன்று ரசிய அதிபர் புடின் பேசிய பிறகு உக்ரைன் தலைநகரம் கியிவில் குண்டு வெடிப்புகள் கேட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அதைப் பார்க்கும் போது முழு அளவிலான தாக்குதலாக தெரிகிறது, விமான நிலையம் மற்றும் முக்கிய அலுவலக கட்டிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது, நகரத்தின் மத்தியில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பேசிய அமெரிக்க அதிபர், ரசிய தாக்குதலை ஏற்க முடியாது, நியாயப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ரசியா மீது தீவிரத் தடைகளை அமல்படுத்துமெனவும் அவர் பேசியருக்கிறார். ஐ.நா. சபையில் தலைவர் அன்டொனியோ கட்டர்ஸும் ரசியாவின் தாக்குதலைக் கண்டித்திருக்கிறார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டமைப்ப்பும் ரசியாவின் தாக்குதல் பொறுப்பற்ற ஒன்று எனக் கண்டித்திருக்கிறது.

ஐ.நாவில் ரசியாவின் தூதராக இருக்கும் வாசிலி நெபன்சியா தான் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர். எட்டு வருடங்களாக உக்ரைனில் ஒரு இனப்படுகொலை நடந்து வருகிறது, ஐ.நா.வின் சாசனப் பிரிவு 51-ன் படி ரசியாவின் உக்ரைன் தாக்குதல் நியாயமென அவர் வாதிட்டார்.

Ukraine War

ஏற்க முடியாது

உக்ரைன் இராணுவத் துருப்புகள் ஆயுதங்களை துறந்து விட்டு சென்று விட வேண்டுமென கூறும் புடின், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை ஒருபோதும் ஏற்முடியாது என கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ரசியாவைக் கண்டித்திருக்கின்றன.

ரசியா தொடுத்திருப்பது தீடீரென பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு மின்னல் வேக அதிர்ச்சித் தாக்குதல். இதன் மூலம் பெரும் போர் இல்லாமலேயே தான் விரும்பியதை பெற முடியும் என ரசியா நம்புவதாக போர் வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தாக்குதல் மூலம் உக்ரைன் அரசு சீர்குலைந்து சரணடையும் என புடின் எதிர்பார்ப்பதாகவம் அவர்கள் கூறுகின்றனர். அதே நேரம் உக்ரைனின் எதிர்ப்பை ரசியா குறை மதிப்பீடு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இப்போதைக்கு போர் ஆரம்பித்திருக்கிறது. இதன் போக்கில் எத்தனை மக்கள் கொல்லப்படபோகிறார்கள், அகதிகளாகிறார்கள், உலக பொருளாதாரத்தில் இப்போர் ஏற்படுத்தும் பாதிப்பு என பல துன்பங்களை உலகம் எதிர்கொள்ளப் போகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?