The story of Margherita Pizza and how it came to being Twitter
உலகம்

பீட்சா முதலில் விவசாய உணவா? எப்படி உலகம் முழுவதும் பிரபலமானது? ஓர் சுவாரஸ்ய தகவல்

பீட்சா முதலில் எளிமையான உணவாகக் கருதப்பட்டது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது.

Priyadharshini R

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாருக்குமே துரித உணவுகள் மீது நாட்டம் அதிகமாகிவிட்டது.

சான்விட்ச், பீட்சா, பர்கர் என வகை வகையான உணவுகளை மக்கள் தேடி தேடி சென்று சாப்பிடுகின்றனர்.

வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த உணவுகள் தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீட்சா பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். அவை எங்கே இருந்து வந்தது என விரிவாக பார்க்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள் என பல கலாச்சாரங்களில் பீட்சாவை பிளாட்-பிரெட் வடிவில் டாப்பிங்ஸ் கொண்டு தயாரித்து சாப்பிட்டு வந்தனர்.

8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் நேபிள்ஸில் பீட்சா தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதன்முதலில் பீட்சா கண்டுபிடிக்கப்பட்ட இடம் சரியாக தெரியவில்லை என்றாலும், பீட்சா வரலாற்றில் நேபிள்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.

பீட்சா முதலில் எளிமையான உணவாகக் கருதப்பட்டது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது.

1800 பிற்கு பீட்சா பிரபலமாக மாறத் தொடங்கியது. இந்த நேரத்தில், இத்தாலிய ராணி மார்கெரிட்டா மற்றும் மன்னர் உம்பர்டோ அவர்களின் ராஜ்யத்தை சுற்றி வந்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​விவசாய கிராமங்களை பார்வையிட்டனர்.

இந்த நேரத்தில் ராணி விவசாய கிராமங்களில் தயாரிக்கப்படும் பீட்சாக்களை சுவைத்தார் அதன் பின்னர் அந்த டேஸ்ட் பிடித்துப்போக, சமையல்காரர்களிடன் பீட்சா குறித்து கூறி தயாரிக்க சொன்னார்.

மென்மையான வெள்ளை சீஸ், தக்காளி ஆகியவற்றைக் கொண்டு இந்த பீட்சா தயாரிக்கப்பட்டது. இதனாலே பீட்சாவுக்கு மார்கெரிட்டா என அவரது பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டில், இத்தாலி முழுவதும் பீட்சா உண்ணப்பட்டது. இத்தாலியர்கள் அமெரிக்காவிற்குச் செல்லத் தொடங்கியதும், பீட்சா மற்றொரு நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியே அவர்கள் வேலை செய்யும் உணவகங்கள் கடைகளில் விற்கப்பட்டது. அப்படி உலகம் முழுவதும் பிரபலமாக உண்ணப்படும் உணவாக மாறியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?