The World’s Most Famous Haunted Dolls Twitter
உலகம்

உலகிலேயே பயங்கரமான 6 பேய் பொம்மைகள்- நடுங்கவைக்கும் பின்னணி கதைகள்!

பொம்மைகள், என்பது குழந்தைகள் விரும்பி விளையாடும் ஒரு பொருளாக பார்ப்பதை கடந்து இன்றும் சிலர் அதனை வீட்டில் இருக்கும் ஒரு மர்மமாக பார்க்கின்றனர்.

Priyadharshini R

அன்னாபெல் முதல் சக்கி வரை படங்களில் வருவதற்கு முன்பே, பலர் இந்த பொம்மைகள் குறித்த கதைகளை நம்பியிருகின்றனர்.

ஸ்மித்சோனியன் இதழ், 19 ஆம் நூற்றாண்டில் பொம்மைகள் உயிரோட்டமானதாக மாறியதாகவும் ​​​​அவை பள்ளத்தாக்குளில் வினோதமாக அலைந்து திரிந்தன என்று குறிப்பிட்டிருக்கிறது.

பொம்மைகள், என்பது குழந்தைகள் விரும்பி விளையாடும் ஒரு பொருளாக பார்ப்பதை கடந்து இன்றும் சிலர் அதனை வீட்டில் இருக்கும் ஒரு மர்மமாக பார்க்கின்ற நிலைக்கு ஹாலிவுட் பேய் படங்கள் நம்மை தள்ளியிருக்கின்றன.

உலகம் முழுவதும் உண்மை என நம்பப்பட்ட பயங்கரமான 6 பேய் பொம்மைகள் குறித்தும், அவற்றின் பின்ணனி குறித்தும் இங்கு காணலாம்.

Annabelle

அன்னாபெல்லின் கதை தி கன்ஜுரிங் மற்றும் அன்னாபெல் படங்கள் வெளியானவுடன் பிரபலமடைந்தது. உண்மையான அன்னாபெல் ஒரு வித்தியாசமான பொம்மை, இது தோற்றத்தில் மோசமானதாக இருந்தாலும், 1970 களில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியது.

அன்னபெல் ஒரு நர்சிங் மாணவியான டோனாவுக்கு அவரது தாயால் வழங்கப்பட்டது.

டோனாவும் அவளது ரூம்மேட் ஆங்கியும் பொம்மையின் நிலையில் எதோ ஒரு மாற்றதை கண்டறிந்தனர்.

அமானுஷ்ய புலனாய்வாளர்களான எட் மற்றும் லோரெய்ன் வாரன் எழுதிய புத்தகத்தில், அன்னாபெல்லை அமானுஷ்யமானது எனக் கூறி தங்கள் கவனிப்பில் எடுத்துக்கொண்டதாக குறிப்பிடுகின்றனர்.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அன்னாபெல்லே வாரனின் அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கின.

Okiku

1918 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒக்கிகு என்ற பொம்மை ஒரு பெண்ணுக்கு அவரது அண்ணனால் வழங்கப்பட்டது. ஒக்கிகு வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அந்த சிறுமி கடுமையான காய்ச்சலால் இறந்தார்.

சிறுமியின் குடும்பத்தினர் அவரது நினைவாக ஒரு கோவிலை உருவாக்கி, அந்த பொம்மையை காட்சிக்கு வைத்தனர். சில நாட்களில் பொம்மையின் தலைமுடி வளர்ந்திருப்பதை குடும்பத்தினர்கள் கவனித்தனர்.

1938 -ல் அந்த குடும்பம் இடம்பெயர்ந்தபோது, ​​​​ஹொக்கைடோவில் உள்ள மென்னென்ஜி கோவிலின் பராமரிப்பில் அவர்கள் பொம்மையை ஒப்படைத்தனர்.

அங்கு உள்ள பராமரிப்பாளர்கள் தொடர்ந்து ஒக்கிகுவையும் அதன் வளரும் முடியையும் பராமரிக்கிறார்கள்.

Lilly

இப்போது ஜாக் பாகன்ஸ் ஆஃப் கோஸ்ட் அட்வென்ச்சர்ஸின் பேய் அருங்காட்சியகத்தில் வசிக்கும் "லில்லி" 1800 களில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது.

இந்த பொம்மை உண்மையான மனித முடியை கொண்டுள்ளதாக சில தகவல்கள் உள்ளன. அருங்காட்சியகத்தின் முகநூல் பதிவின்படி, ஒரு பழங்கால விற்பனையாளர் இந்த பொம்மையைக் கண்டுபிடித்து அவர் வீட்டுக்கு எடுத்து சென்றிருக்கிறார்.

அன்றிரவு ஒரு சிறுமி விபத்துக்குள்ளாவது போன்ற அமானுஷ்ய கனவை மீண்டும் மீண்டும் காணத் தொடங்கினார். இதனால் அச்சமடைந்த அவர் லில்லியை பழங்கால கடையில் கொடுத்துவிட்டார்.

Robert the Doll

ராபர்ட் 1900 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ வெஸ்டில் உள்ள ஓட்டோ குடும்பத்தில் அவர்களின் இளைய மகன் ராபர்ட் யூஜின் ஓட்டோவுக்கு பரிசாக வந்தது.

சிறுவன் பொம்மையை விட்டு பிரியவே இல்லை, தங்கள் மகன் தனது அறையில் தனியாக இருக்கும்போது, பொம்மையுடன் உரையாடுவதையும், பொம்மை மாறுபட்ட குரலில் பதிலளிப்பதையும் அவர்கள் கேட்டதாக கூறியிருக்கின்றனர்.

1974 இல் ராபர்ட் யூஜின் ஓட்டோ இறந்த பிறகு, ராபர்ட் (பொம்மை) மீதான அமானூஷ்ய கதைகள் வளர்ந்தன. பின்னர், கிழக்கு மார்டெல்லோ அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது.

Ruby

ரூபி ஒரு பீங்கான் பொம்மை. தற்போது அமானுஷ்ய பயண அருங்காட்சியகத்தில் வசிக்கும் ரூபி மர்மமான தோற்றத்தில் காட்சியளிக்கும்

முந்தைய உரிமையாளர் கூறுகையில், ஒரு சிறுமி இந்த பொம்மையை வைத்திருந்தப்படியே இறந்துவிட்டதாகவும், அப்போது அந்த சோகத்தை உணர்ச்சியாக வெளிப்படுத்தியதாகவும் ஒரு தகவல்கள் இருக்கின்றன.

அருங்காட்சியகத்தில் தற்போது வசிக்கும் ரூபியை பார்க்கும் போது ஒரு வித வினோதமான உணர்வை அனுபவிப்பதாக பார்வையாளர்கள் அடிக்கடி தெரிவிக்கின்றனர்.

Letta

லெட்டா என்பது மனித முடியுடன் கூடிய 200 ஆண்டுகள் பழமையான மர பொம்மை.

அவரது தற்போதைய பராமரிப்பாளரான கெர்ரி வால்டன் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டின் அடியில் அதனை கண்டுபிடித்தார்.

இரவு நேரத்தில் லெட்டா நடப்பதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் மர்மமான முறையில் இடம் பெயர்ந்தாகவும் வால்டன் கூறினார். மேலும் வால்டன் பல தொலைக்காட்சி நேர்காணல்களுக்கு லெட்டாவை தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?