There are no walls at this quirky hotel in the Swiss Alps  Twitter
உலகம்

4 பக்கமும் சுவரே இல்லாத படுக்கையறை - ஜீரோ ஸ்டார் ஹோட்டலின் பலே ஐடியா! பின்னணி என்ன?

Priyadharshini R

காலையில் எழுந்ததும், உங்களது கண்கள் முதலில் பார்ப்பது ஒரு கண்கவர் பள்ளத்தாக்கு என்றால் எப்படி இருக்கும். நினைத்தாலே கிலுகிலுப்பாக இருக்கிறதல்லவா?

ஒரு ஜன்னலோ, சுவரோ இல்லாமல் நீங்கள் நேரடியாக அப்படி அதனை கண்டு ரசிக்க முடியும், முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது இந்த நட்சத்திர ஹோட்டல்.

சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரக் ஹோட்டல், வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருப்பதற்காக வைரலாகி இருக்கிறது.

இந்த ஹோட்டலில் என்ன வித்தியாசம் என்றால் இந்த ஹோட்டலுக்கு வெளிப்புறச் சுவர்கள் எதுவுமே கிடையாது. அதாவது நான்கு புறமும் சுவர்களே இல்லாமல் இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது.

சரி சுவர்கள் தான் இல்லை, மேற் கூரையாவது இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை.

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் உள்ள Saillon கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஹோட்டல்.

இந்த ஹோட்டல் இப்படியாக உருவாக்கப்பட்டதற்கு பின்னணி இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

அதாவது எவ்வளவு வசதிகள் குறைந்தாலும், சின்ன சின்ன விஷயங்கள் மக்களுக்கு பெரிய குறையாக தெரிகிறது. பருவநிலை மாற்றங்கள் தொடங்கி நாடுகளுக்கிடையேயான போர் வரை பல்வேறு இன்னல்களை மனிதர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.

அந்த நேரங்களில் குறைவான தேவைகளுடன் நிறைவுடன் வாழ மனிதர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இவை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். அதெல்லாம் தான் இப்படியான ஹோட்டல் அமைக்க மூலகாரணம் என்று கூறுகின்றனர்.

ஜெர்மன் மொழியில் " ஜீரோ ஸ்டார் ஹோட்டல்" என்று பொருள்படும் Null Stern Hotel இன் கான்செப்ட், விருந்தினர்களுக்கு சுவர்களோ கூரையோ இல்லாமல் சுவிஸ் ஆல்ப்ஸில் தூங்கும் அனுபவத்தை வழங்குகிறது.

சுவர்கள் இல்லாத இந்த ஹோட்டல் இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட ஒரு கட்டில், அருகில் இரண்டு நாற்காலிகள், மேஜை, அவற்றில் விளக்குகள், காலை உணவு, பானம் உள்ளிட்டவற்றுடன் மட்டுமே அமைக்கப்பட்டு இருக்கிறது.

முதல் Null Stern ஹோட்டல் 2008 இல் சுவிஸ் ஆல்ப்ஸில் உள்ள Teufen நகரில் திறக்கப்பட்டது.

Null Stern ஹோட்டலில் தங்குவதற்கு தோராயமாக 16,000 ரூபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?