இந்தோனேசியா: எரிமலையின் உச்சியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலை  twitter
உலகம்

எரிமலையின் உச்சியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலை - எங்கே?

Keerthanaa R

உலகளவில் மத நம்பிக்கைகள் பல உள்ளன. அதிலும் இந்து மதமானது பல்வேறு நாடுகளிலும் பரந்து விரிந்து இருக்கிறது.

இதன் விளைவாக நாம் எதிர்பாராத இடங்களில் கூட கோவில்கள் அமைந்திருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

மிகவும் வித்தியாசமான ஒரு இடத்தில் தான் இந்த விநாயகர் சிலையும் அமைந்துள்ளது.

இந்தோனேசியாவின் குனுங் ப்ரோமோ என்ற பகுதியில் எரிமலையின் மீது அமைந்திருக்கிறது ஒரு விநாயகர் சிலை. சுமார் 700 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிற இந்த விநாயகர், அந்த பகுதி மக்களை எரிமலை வெடிப்புகளில் இருந்து காப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

இந்தோனேசியாவில் இந்து மதக் கடவுளான விநாயகருக்கு தனிச் சிறப்பு இருக்கிறது. பல்வேறு இடங்களில் விநாயகருக்கு கோவில்களும் உள்ளன.

அதே சமயத்தில் இந்தோனேசியாவில் எரிமலைகளுக்கும் பஞ்சமில்லை. அங்கிருக்கும் சுமார் 141 எரிமலைகளில் 130 எரிமலைகள் செயலில் உள்ளன.

இந்த விநாயகர் அமைந்திருக்கும் இடத்தில் வசிக்கும் மக்களை டெனெகர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வழிபடும் இந்த எரிமலை விநாயகரின் பெயர் விக்நஹர்தா. இதற்கு இவர்கள் தினசரி பூஜைகளும், ஆரத்திகளும் செய்கின்றனர்.

இந்த விநாயகரை டெனெகர்களின் மூதாதயர்கள் அந்த எரிமலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்ததாகவும், நூற்றாண்டுகளாக இவர்கள் இந்த கடவுளை வழிபட்டு வருவதாகவும் கூருகின்றனர்.

ஒரு வேளை இந்த எரிமலை வெடித்தாலும், இந்த பகுதி மக்கள் இவரை வழிபடுவதை நிறுத்துவதில்லை. விநாயகரே அவர்களை ஆபத்தில் இருந்து காப்பதாக நம்புகின்றனர்.

தவிர 15 நாள் கொண்டாடப்படும் யட்னய கசடா என்ற திருவிழாவும் கோலாகலமாக நடக்கிறது.

இந்த ப்ரோமோ மலையானது, இந்தோனேசியாவின் புனித தலமாக கருதப்படுகிறது. இந்த இடத்தின் பெயர், ப்ரோமோ, படைக்கும் கடவுளான பிரம்மனை குறிக்கிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரோமோ டெங்கர் செமேரு தேசிய பூங்காவில் இந்த எரிமலை உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?