உலகின் மிக வயதான எலி - கின்னஸ் சாதனைகள் பட்டியலில் பெயர் சேர்ப்பு canva
உலகம்

உலகின் மிக வயதான எலி - கின்னஸ் சாதனைகள் பட்டியலில் பெயர் சேர்ப்பு

Keerthanaa R

உலகின் வயதான எலி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது Pat என்ற எலி. சான் டியாகோ மிருகக்காட்சிசாலை வனவிலங்கு கூட்டணியின் படி இதன் வயது 9 ஆண்டுகளாகும்.

சான் டியாகோ மிருகக்காட்சி சாலை சஃபாரி பூங்காவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் பிறந்தது இந்த பசிபிக் பாக்கெட் மௌஸ் வகையை சேர்ந்த எலி. ஸ்டார் டிரெக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த கதாபாத்திரமான பாட்ரிக் ஸ்டூவர்ட் நினைவாக இந்த எலிக்கு பாட் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஒரு எலியின் சராசரி ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் தான். வீட்டில் வளர்க்கப்படும் எலிகள் 6 முதல் 7 ஆண்டுகள் வரை உயிர்வாழும். அதுவும் மிக அரிதான சந்தர்பங்களில் தான்.

இந்த சராசரி ஆயுள் காலத்தை தாண்டி பாட் எலி வாழ்ந்துள்ளதால், இதன் பெயரை கின்னஸ் சாதனைகள் பட்டியலில் சேர்க்க மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் வெகு நாட்களாக முயற்சித்து வந்துள்ளனர். கடைசியாக கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி கின்னஸ் சாதனை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒரு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?