ருமேனியா: வெறும் 6 கோடி விலைக்கு வரும் அழகிய கிராமம் - என்ன சிறப்பு? Twitter
உலகம்

ருமேனியா: வெறும் 6 கோடி விலைக்கு வரும் அழகிய கிராமம் - என்ன சிறப்பு?

Priyadharshini R

இந்தியாவை பொறுத்தவரை அனைத்து வசதிகளுடன் உள்ள ஒரு பண்ணை வீட்டை வாங்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு ஒரு கிராமமே விற்பனைக்கு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள் இந்த பகுதியில் அந்த கிராமத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம் .

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்ள ஒரு முழு கிராமமும் விற்பனைக்கு இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.

குறிப்பாக இந்திய நகரத்தில் இருக்கும் சாதாரண பங்களாவை விட இங்கு உள்ள வீடுகளின் விலை குறைவு என்பதால் , கிராமத்து பண்ணை வீடுகளை விரும்புவோர் இங்கு படையெடுக்கின்றனர்.

ருமேனியாவின் மரமுரேஸ் கவுண்டியில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்ட ஐந்து வீடுகள் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது கிமு 625 முன்னர் எப்படி இருந்ததோ அதே போல் வடிவமைத்துள்ளனர்.

இந்த கிராமத்தின் விலை £650,000க்கு ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.53 கோடி விற்பனைக்கு உள்ளது. 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் உள்ள வீடுகளின் அமைப்பு நம்மை பழங்காலத்துக்கு அழைத்து செல்கின்றது.

குறிப்பாக இதன்னுள் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான விரிப்புகள், மர கூரைகள், வர்ணம் பூசப்பட்ட கதவுகள் மற்றும் மரக் கற்றைகள் உள்ளிட்டவை பழங்கால அமைப்பிலே உள்ளது.

இது இயற்கையோடு வாழ விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. ருமேனிய மக்களின் பழைய மரபுகளை அழகாக இது காட்டுகிறது.

இந்த கிராமத்தை சுற்றி அழகான பண்ணைகள் மற்றும் வயல்கள் உள்ளன. இது நகர்புறங்களில் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வெடுக்க விரும்புகின்றவர்களுக்கு வரமாக உள்ளது .

வீடுகளில் மொத்தம் 22 படுக்கைகள் மற்றும் 14 படுக்கையறைகள் மற்றும் ஆறு குளியலறைகள் உள்ளன.

மேலும் இப்பகுதியில், உள்ளூர் மக்கள் இன்னும் ரோமானிய மரபுகளை உயிருடன் வைத்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நாட்டுப்புற உடைகளை அணிந்து தங்கள் வரலாற்றை மதிக்கிறார்கள். இவ்வுளவு சிறப்பு வாய்ந்த கிராமத்தை வாங்க பெரும் போட்டி நிலவுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?