நிலவு சுற்றுலா முதல் காண்டாமிருக வேட்டை வரை : பணக்காரர்களுக்கு மட்டுமான 5 சாகசங்கள் எவை? Twitter
உலகம்

நிலவு சுற்றுலா முதல் காண்டாமிருக வேட்டை வரை : பணக்காரர்களுக்கு மட்டுமான 5 சாகசங்கள் எவை?

Antony Ajay R

நம் தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு புதிய இடங்களுக்கு செல்வதும், சாகசங்களில் ஈடுபடுவதும் இன்று வழக்கமானதாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை உலகம் முழுவதும் த்ரில்லிங்கான ஆபத்து நிறைந்த சாகசங்களை பணக்காரர்கள் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டுகிறது.

இந்த சாகசங்கள் பணக்காரர்கள் மட்டுமே செய்யும் அளவும் காஸ்ட்லியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சேர்ந்த பேக்கேஜிங் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ARKA இந்த ஆராய்ச்சியை நடத்தியது.

அதிக ஆபத்து நிறைந்த சாகசங்கள் அவற்றுக்கு ஆகும் செலவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவை சுற்றிப் பறத்தல் : 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

உலகில் இருக்கும் சாகசப் பயணங்களிலேயே அதிக ஆபத்து நிறைந்தது இந்தப் பயணம் தான். பிரிட்டிஷ் பணக்கார வியாபாரியும் விர்ஜின் குழும நிறுவனருமான ரிச்சர்ட் ப்ரான்சன், மென்பொருள் ஆர்கிடெக்டான சார்லஸ் சிமோனி ஆகியோர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது ஆபத்து நிறைந்தது மட்டுமல்ல, இந்திய மதிப்பில் 1.2 லட்சம் கோடி ரூபாய் தேவை. இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து இதுவரை 24 பேர் மட்டுமே இந்த சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

விண்வெளி பயணம் : 55 மில்லியன் அமெரிக்க டாலர்

அடுத்ததாக பில்லியனர்கள் விரும்பி செல்லும் சாகச பயணமாக இருப்பது விண்வெளிப் பயணம். இதனை மேற்கொள்வதற்கு 45.5 கோடி ரூபாய் தேவை.

சார்லஸ் சிமோனி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசொஸ் உட்பட 622 பேர் இந்த காஸ்ட்லியான சாகசத்தை செய்துள்ளனர்.

ப்ளூ ஆர்ஜின் விண்வெளி விமானம் : 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ள இதனை முயற்சி செய்து பார்க்க 23 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தேவை. இதில் ரிஸ்கும் அதிகம்!

ஜெஃப் பெசோஸ், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 31 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையம் : 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

சர்வதேச விண்வெளி நிலையம் ISSக்கு பயணிப்பது நிச்சயமாக வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இதுவரை 244 கோடீஸ்வரர்கள் மட்டுமே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஆபத்துகள் நிறைந்த இந்த பயணத்துக்கு 16.5 ஆயிரம் கோடி தேவை.

மரியானா அகழியில் ஸ்கூபா டைவிங் : 7.5 லட்சம் அமெரிக்க டாலர்கள்

கடலை விரும்பும் யாவருக்கும் ஒரு முறையாபது ஸ்கூபா டைவிங் செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்க. இது மிகவும் எளிதான ஒன்றுதான் நீங்கள் கோடீஸ்வரராக இருந்தால்!

புகழ்பெற்ற மரியான அகழியில் டைவ் செய்ய 6.2 கோடி செலவு செய்ய வேண்டும். ஆபத்து மிக மிக அதிகம். இதுவரை 3 நபர்கள் மட்டுமே இதனை செய்துள்ளனர். அதில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ஒருவர்.

காண்டாமிருக வேட்டை : 2,75,000 அமெரிக்க டாலர்கள்

காண்டாமிருக வேட்டை மிகவும் ஆபத்து நிறைந்த சாகசமாகும். இதனை எத்தனை பேர் செய்துள்ளானர் என்பது தெளிவாக தெரியவில்லை.

சட்டப்பூர்வமாக காண்டாமிருகத்தை வேட்டையாட தென்னாப்பிரிக்கா மற்றும் நாம்பியாவில் மட்டுமே அனுமதி உள்ளது.

இதற்கு 2.3 கோடி வரை செலவு ஆகலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?