Travelling To Myanmar Via Road? Here’s What You Should Know Twitter
உலகம்

Travel : பைக் ட்ரிப் செல்ல ஆசையா? இந்தியா To மியான்மர் செல்ல சூப்பர் ஐடியா இதோ!

Priyadharshini R

இன்றைய தலைமுறையினரிடையே ரோடு டிரிப் செல்லும் வழக்கம் அதிகரித்துவிட்டது. பயண காதலர்கள் நீண்ட தூர சாலைப் பயணங்களை விரும்புகின்றனர்.

இது பல்வேறு நகரங்களின் வித்தியாசமான கலாச்சாரங்களை ஆராயும் வாய்ப்பை வழங்குகிறது. அப்படி சாலை வழியாக செல்லக்கூடிய நாடு தான் மியான்மர். எப்படி செல்லலாம் என்று இந்த பதிவில் காணலாம்.

அண்டை நாடான மியான்மருக்கு நீங்கள் சாலை வழியாக செல்லலாம். மே 11, 2018 அன்று இரு நாடுகளுக்கும் இடையே இந்தோ-மியான்மர் எல்லைக் கடக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு சாலை வழியாக எளிதில் பயணிக்க முடியும்.

மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய நான்கு இந்திய மாநிலங்களுடன் மியான்மர் அதன் எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளுக்கு இடையே இரண்டு சர்வதேச நுழைவு மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகள் உள்ளன.

ஒன்று மணிப்பூரில் உள்ள மோரே மற்றும் தாமு என்ற இரட்டை நகரங்களில் அமைந்துள்ளது. மற்றொன்று மிசோரமில் உள்ள சவ்காவ்தார், ரிஹ்காவ்தார் இடங்களில் உள்ளன. சாதாரண சுற்றுலாப் பயணிகள் விசாவுடன் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதுமானது.

எப்படி செல்லலாம்?

இந்தியாவில் இருந்து மியான்மாருக்கு குறைந்த நேரத்தில் செல்ல வேண்டுமானால் ஏற்கனவே சொன்ன மணிப்பூரின் நுழைவு வழியாக செல்லலாம். அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.

இம்பால் விமான நிலையம் (மணிப்பூர்) மற்றும் மோரே எல்லைக்கு இடையே பயணிக்க சுமார் 3.5 மணிநேரம் மட்டுமே ஆகும். அதே சமயம் மிசோரமில் உள்ள நுழைவு வழியாக பயணித்தால் சுமார் 10 மணிநேரம் ஆகும். எல்லையில் இருந்து 242 கிமீ தொலைவில் உள்ள லெங்புய் விமான நிலையம் உள்ளது.

மியான்மருக்கு காரில் செல்ல முடியுமா?

இதற்கு நீங்கள் கார்னெட் டி பாஸ்(Carnet De Pass) மற்றும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (IDP) வைத்திருப்பது அவசியம் இதை பிராந்திய போக்குவரத்து ஆணைய அலுவலகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

மியான்மர் விசா பெறுவது எப்படி?

மியான்மர் பயணிகள் விசா எளிதில் பெற்றுவிடலாம். இன்றைய காலகட்டத்தில் விசா பெற நீங்கள் தூதரகத்திற்குக் கூட செல்ல வேண்டியதில்லை. இ- விசா விண்ணப்பம் போதுமானது.

சென்னையில் இருந்து கொல்கத்தா வரை செல்லலாம். அதன் பின்னர் இந்தியாவின் கிழக்கு - மேற்கு தேசிய நெடுஞ்சாலையான NH 27 இல் திரும்பினால் அசாமின் போர்காட் வரை செல்லலாம்.

அங்கிருந்து தென்கிழக்கு வழியாக சுமார் 3,257 கிமீ சென்றால் மியான்மர் எல்லையை அடைந்துவிடலாம். கிட்டதட்ட 3 நாட்கள் பயணிக்கும் இந்த ரோடு ட்ரிப் நிச்சயம் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?