Turkey and Syria : Huge earthquake kills more than 100 across  Twitter
உலகம்

துருக்கி : பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு - 100 பேர் பலி?

Priyadharshini R

துருக்கியில் உள்ள நூர்தாகி என்ற நகருக்கு அருகே இன்று காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் புவி ஆய்வு மையம்," துருக்கியின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறது.

உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து, 100 பேருக்கு மேல் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்கள் பல இடிந்து விழுந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. ஆனால், துருக்கி அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த சில மணிநேரங்களில் பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் பெரும் இடிபாடுகளின் கீழ் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளனர்.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியா, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்திருக்கிறார்.

காசியான்டெப்பின் வடகிழக்கில் உள்ள மாலத்யா மாகாணத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்குப் பகுதியில் உள்ள சான்லியுர்ஃபாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தியர்பாகிர் மற்றும் ஒஸ்மானியே ஆகிய இடங்களில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?