கடந்த பிப்ரவரி 6 அன்று துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது.
துருக்கியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட 160,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து, சேதமடைந்துள்ளன. இது வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கை அதிகமானதற்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை சேர்ந்த கட்டிடவியல் வல்லுநர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .
அந்த நாட்டின் கட்டுமான விதிமுறையை உரிய வகையில் அமல்படுத்தாமல் ஊழல் செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து பல்லாயிரக்கணக்கானோர் பலியானதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விசாரணை தொடர்பாக இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்களின் கவனத்தை இந்த காரணம் திசை திருப்பியுள்ளது.
இந்நிலையில், கட்டிடவியல் வல்லுநர்கள் இந்தியாவை பொறுத்தமட்டில் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்குமிடம் வழங்குவதை லட்சியப் பணியாகக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, பாதுகாப்பான ரியல் எஸ்டேட் உள்கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு இன்னும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில், உயிரிழப்பு அபாயம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
இந்த சேதம் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தும்.
மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சமூகங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் உருவாகும்.
இது பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுக்கும், தற்போதுள்ள வறுமை மற்றும் சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கலாம்.
இந்தியாவில், அங்கீகரிக்கப்பட்ட முறையில் கட்டுமானங்களைச் செய்யும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் உள்ளனர். ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தைச் செய்யும் டெவலப்பர்களும் இருக்கின்றனர்.
அவர்கள் முறையான கட்டுமான நுட்பத்தைப் பின்பற்றுவதில்லை, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும்.
கட்டுமானத்தை நிறைவேற்றுவதில் சமமான கவனம் தேவை மற்றும் கட்டமைப்புத் திட்டங்களை கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவிற்கு அவற்றின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust