UAE President Twitter
உலகம்

UAE : ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம் - 40 நாட்கள் இரங்கல் கடைபிடிக்க முடிவு

உடல் நலக் குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது.

Keerthanaa R

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், 73, இன்று காலமானார். இவர் 2004ல் தன் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மரணித்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராக பொறுப்பேற்றார். 1971 ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராக ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் பொறுப்பேற்று, நவம்பர் 2, 2004 வரை ஆட்சி புரிந்தார். இவருக்கு பின், இன்று காலமான இவரது மூத்த மகன் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

UAE President

இவர் அபுதாபி எமிரேட்டின் 16வது ஆட்சியாளராகவும் இருந்து வந்தவர். மறைந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பெறும் வளர்ச்சியை மிகக் குறைந்த காலகட்டத்தில் அடைந்தது குறிப்பிடத்தக்கது. 2014ல் நடந்த ஒரு அறுவை சிகிச்சைக்கு பிறகு, பெரிதும் வெளியில் வராமல் ஆட்சி மட்டும் புரிந்துக்கொண்டிருந்தார்.

இவரது மறைவுக்கு, ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம், மற்றும் உலக மக்களுக்கு, ஜனாதிபதி அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று மரணமடைந்த நிலையில், இவரது சகோதரர் இனி பொறுப்பை ஏற்பார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது

UAE President

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?