Ukraine Russia War

 

Twitter

உலகம்

உக்ரைன் ரசியா போர்: இந்த வீடியோக்களை நம்பாதீர்கள் - An Analysis

வாட்ஸ்அப் வதந்தி பல்கலையின் முக்கியமான துறை போலியான மாஃர்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள்மற்றும் வீடியோக்கள். இது தனிநபர்கள் துவங்கி அரசுகள் வரை செய்கின்றன.

Newsensetn

குஜராத் மாடல் வளர்ச்சி என நமக்கு காட்டப்பட்ட படங்கள் பல சீனாவின் நகரக் காட்சிகள் என்பதை நாமறிவோம். இப்போது உக்ரைன் போர் குறித்தும் அத்தகைய வீடியோக்கள் நிறைய போலியாக உலவுகின்றன. போர் என்பது மக்களைக் கொல்லும் பயங்கரம் என்பதை விடுத்து அதை ஒரு ஆக்சன் திரைப்படம் போல ரசிக்கும் குரூராமன மனநிலை இது.

Fake Video

உக்ரைன் மீது ரசியா நடத்தி வரும் போர் குறித்து பல பழைய வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அவற்றில் பல இதற்கு முந்தயை உக்ரைன் சண்டைகள் மற்றும் உலகில் பல இடங்களில் நடந்த போர்க்காட்சிகளாகும்.

Fake Video

டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் இதற்கென்றே உண்மை அறியும் வல்லுநர்களைக் கொண்டு அத்தகைய செய்திகள், வீடியோக்களை நீக்குகின்றன. ஆனாலும் இவை பரவுவதும் புதிதாக வருவதும் நிற்பதில்லை.

Fake Video

ரசியா படையெடுப்பின் முதல் மணி நேரக் காட்சி என ரசிய விமானம் உக்ரைனில் பறப்பதாக ஒரு வீடியோ வைரலானது. உண்மையில் அந்த விமானம் அமெரிக்காவின் எஃப் 16 வகைப்பட்ட விமானமாகும். அது உக்ரைன் மற்றும் ரசிய விமானப்படையில் இல்லவே இல்லை.

Fake Video

இன்னொரு வீடியோவில் ஒரு விமான அணிவகுப்பு பறந்தவாறு நகர்ப்புறத்தில் குண்டு வீசுவதாகக் காட்டப்பட்டது. அதை ஒட்டி நகரத்தில் அபாயச் சங்கு ஒலிப்பதாகவம் இருந்தது. உண்மையில் அந்தக் காட்சி விமானப்படையின் சாகசத்தை மக்களுக்கு காட்டுவதற்காக 2020 ஆம் ஆண்டில் நடந்த அணிவகுப்பு காட்சியாகும். அதில் சங்கு அபாய ஒலி செயற்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

Facebook

மற்றுமொரு வீடியோவில் ரசிய துருப்புகள் பாராசூட் மூலம் உக்ரைன் நகரமான கார்கிவில் இறங்குவது போலக் காட்டப்படுகிறது. இது டவிட்டரில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. உண்மையில் இக்காட்சி ரசிய மொழி இணையதளம் ஒன்றில் 2016- ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒன்று.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?