புதினின் உடல்நிலை சரியில்லை என்பதில் உண்மையில்லை என சிஐஏ வின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் புதினுக்கு 70 வயதாகப்போகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், குறிப்பாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்படாத ஊடக தகவல்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில்தான் அம்மாதிரியான கூற்றுகளை மறுத்துள்ளார் சிஐஏவின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ்.
புதினின் உடல்நிலை சரியில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த அவர், சொல்லப்போனால் அவர் மிகுந்த ஆரோக்கியத்துடனே காணப்படுகிறார் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
புதினின் உடல்நிலை குறித்து பலதரப்பட்ட வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் முழுமையாக நலமாக இருக்கிறார் என்றுதான் எங்களால் சொல்ல முடியும் என்றார் பர்ன்ஸ்.
இருப்பினும் இது அதிகாரபூர்வ உளவு தகவல்களை கொண்டு கூறப்படும் செய்தி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
பர்ன்ஸ் ரஷ்யாவின் தூதுவராகவும் செயல்பட்டிருக்கிறார். எனவே தான் கடந்த 20 வருடங்களாக புதினை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“புதின், கட்டுப்பாடு, அச்சுறுத்தல் அடைதல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர். கடந்த 10 வருடங்களில் இந்த குணாதிசயங்கள் மேலும் கடினமாகியுள்ளது. இதற்கு அவரின் ஆலோசகர்களின் எண்ணிக்கை குறைந்ததும் காரணமாக இருக்கலாம்,” என பர்ன்ஸ் தெரிவித்தார்.
“ரஷ்யாவின் தலைவராக, ரஷ்யாவை ஒரு வலுவான சக்தியாக நிலை நிறுத்துவதே தனது கடமை என அவர் நம்புகிறார். ரஷ்யாவின் அண்டை நாடுகளில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தாமல் அதைச் செய்ய முடியாது என நம்பும் புதினுக்கு யுக்ரேன் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தப்போகிறது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கொடுத்த தகவலுக்கு பிறகு அதுகுறித்து எச்சரிக்க கடந்த நவம்பரில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார் பர்ன்ஸ்.
ஆனால் ரஷ்ய அதிபர் புதின் தவறான அனுமானங்களை ஆழமாக நம்புவதாகவும், குறிப்பாக யுக்ரேன் குறித்து அவருக்கு பல மாயைகள் இருப்பதாகவும் அதை அவர் புறக்கணிக்க மறுப்பதாகவும் பர்ன்ஸ் தெரிவித்தார்.
“புதின் தனது கூற்றை ஆழமாக நம்புகிறார். அவர் உக்ரனை ஒரு நிஜமான நாடாகவே அவர் கருதவில்லை. ஆனால் நிஜமான நாடு எதிர்த்து சண்டையிடும் அதைதான் தற்போது உக்ரைனும் செய்து கொண்டிருக்கிறது.” என்றார் பர்ன்ஸ்
ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யத் தரப்பிலிருந்து 15 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 45 ஆயிரம் பேர் வரை காயமடைந்திருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் உக்ரைன் தரப்பில் இது இந்த எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் உக்ரைனுக்கு அதிக தொலைதூர தாக்குதல் வல்லமை கொண்ட ஆயுதங்களை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ரஷ்யா, இனி உக்ரைனின் கிழக்கில் மட்டும் தாக்குதல் நடத்தாமல் தங்களது திட்டத்தை முழுவதாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust