உக்ரைன் ரஷ்யா போர் NewsSense
உலகம்

Ukraine Russia War: ரஷ்ய டாங்கிகளை துவம்சம் செய்யும் உக்ரைன் - சாத்தியமானது எப்படி?

Antony Ajay R

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் ஆக்கிரமிப்பைத் தொடங்கியது முதலே நிலையான எதிர்ப்பை, பதிலடியைக் கொடுத்து வருகிறது உக்ரைன். போரில் ரஷ்யா பெரும் இராணுவ இழப்பைச் சந்தித்து வருகிறது. முக்கியமாக ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்திருக்கிறது. தரை வழி ஆக்கிரமிப்பில் டாங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் ரஷ்ய டாங்கிகளை சில நுட்பங்களின் மூலம் எளிதாக அளித்து வருகிறது உக்ரைன். உக்ரைன் டங்கிகளை வெற்றிகொள்வதன் பின்னணியைப் பார்க்கலாம்.

உக்ரைனின் டாங்கி அழிப்பு ஏவுகணைகள்

ரஷ்யாவின் இந்த பெரிய அளவிலான இழப்புக்கு உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் இதர நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஏவுகணைகளே முக்கிய காரணம். மோதலின் தொடக்கத்தில் ரஷ்யா உக்ரைனுக்கு 2000 டாங்கி அழிப்பு ஏவுகணைகளை வழங்கியது. இன்று வரை மேலும் 2000 ஏவுகணைகளை அனுப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது.

அதில் பெரும்பாலும் ஜாவெலின் ரக ஏவுகணைகள். ரஷ்ய டாங்கிகள் சாதாரண ஏவுகணைகள் மூலம் அழித்து விடக் கூடியவை இல்லை. அவை அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. நான்கு பக்கங்களிலும் கடினமான கவசத்தைக் கொண்டிருக்கும்.

ஜாவெலின் ஏவுகணை

ஜாவெலின் ரக ஏவுகணைகள் ஈட்டி எறிதலில் எறியப்பட்ட ஈட்டி போல மேலே சென்று செங்குத்தாக டாங்கிகளின் மேல் புறத்தில் சென்று வெடிக்கக்கூடியவை. இவற்றில் இரண்டு தொகுப்பு வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் வெடி கவசத்தை உடைக்கிறது. இரண்டாவது தொகுப்பு அடிப்பாகம் வரை வெடிக்க வைக்கிறது.

அமெரிக்கா வழங்கும் ஜாவெலின் தவிர பிரிட்டன் 3600 இலகு ரக டாங்கி அழிப்பு ஏவுகணையான NLAW ஏவுகணைகளை வழங்கியிருக்கிறது. இதுவும் டாங்கியின் மேல் திறப்புக்கு அருகில் சென்று வெடிக்கக்கூடியது. இரண்டு ஏவுகணைகளும் சக்தி வாய்ந்தவை.


ரஷ்யா இழந்த டாங்கிகள்

போர் தொடங்கும் போது ரஷ்யாவிடம் 2700 டாங்கிகள் இருந்ததாக ராண்ட் கார்ப்பரேஷன் மற்றும் ஐஐஎஸ்எஸ் (இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ்) ஆகியவை தெரிவிக்கின்றன. இவற்றில் 680 டாங்கிகளை ரஷ்யா இழந்திருப்பதாக உக்ரைன் இராணுவம் கூறுகிறது. ஆனால் 460 டாங்கிகளையும் 2000 கவச வாகனங்களையும் இழந்திருப்பதாக ஓரிக்ஸ் இணையதளம் கூறுகின்றது. இவை அனைத்துமே அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசின் உதவியால் சாத்தியமானது.

இத்துடன், அமெரிக்கா யுக்ரேனுக்கு 100 ஸ்விட்ச்ப்ளேட் டாங்கி அழிப்பு ட்ரோன்களை வழங்குகிறது.

உக்ரைன் போர்

போர் தந்திரத்தில் ரஷ்யா செய்த தவறு

ரஷ்யா ஆக்கிரமிப்புக்காக காலாப்பட்படை, டாங்கிகள், பீரங்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பட்டாலியன் டாக்டிகல் குழுக்கள் (BTGs) என்ற போர் முறையில் போரிடுகின்றன.

ரஷ்யாவிடம் அதிக அளவிலான காலாட்படை வீரர்கள் இல்லாததே ரஷ்யா இந்த போர் முறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் குறைந்த காலாட்படை வீரர்கள் அதிக வாகனங்களின் மூலம் முன்னேறிச் செல்ல முடியும்.

குண்டு மழை பொழிந்தவாறு ரஷ்யப் படைகள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க முடிந்தாலும் குறைந்த தொலைவில் டாங்கிகள் தாக்குதலுக்கு ஆளாகும் போது எதிர்த் தாக்குதல் நடத்த ரஷ்யாவிடம் காலாட்படை வீரர்கள் இருப்பதில்லை. இதனால் தாக்கும் சக்தி அதிகம் இருந்தாலும் இந்த முறையில் டங்கிகள் நேரடியாக உக்ரைன் இராணுவத்திடம் காவு கொடுக்கப்படுகின்றன.

இதனுடன் ரஷ்ய விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடாததால் டாங்கிகள் செல்லும் வழிகளில் மறைந்திருந்து தாக்குவது உக்ரைன் இராணுவத்தினருக்கு எளிதானதாக இருக்கிறது.

டங்கிகளை இழுத்து செல்லும் டிராக்டர்கள்

ரஷ்ய வீரர்களுக்குத் திறமை இல்லையா?

இந்த நேரத்தில் சமீபத்தில் வைரலான புகைப்படம் ஒன்றை நாம் நினைவுகூற வேண்டும். அதில் உக்ரைனிய விவசாயிகள் தங்கள் டிராக்டர்களின் மூலம் ரஷ்யாவின் டாங்கி ஒன்றை இழுத்து செல்கின்றனர்.

இது போன்ற சம்பவங்களுக்கு ரஷ்ய இராணுவத்தினரின் திறமையின்மையும் போரின் மீதான ஆர்வமின்மையுமே காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ரஷ்யா இது வரை இழந்த டாங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டை உக்ரைனிய இராணுவத்தால் வீழ்த்தப்படாமல் ரஷ்ய வீரர்களால் கைவிடப்பட்டவை. மிக மோசமாக ஓட்டப்பட்டதன் காரணாக ஏற்படும் பழுதுகளால் சில டாங்கிகள் கைவிடப் படுகின்றன. சில மழை சேற்றில் சிக்கிக்கொள்கின்றன, சில பள்ளங்களில் விழுகின்றன, சில பாலங்களில் கவிழுகின்றன, சில எரிபொருள் இல்லாமல் கைவிடப்படுகின்றன. ரஷ்ய வீரர்களுக்குப் போரிடுவதில் விருப்பம் இல்லாமலிருப்பதே இத்தகைய இழப்புக்குக் காரணம் என்கின்றார்கள் வல்லுநர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?