Qatar: Football ஸ்டேடியத்தில் LGBTQ ஆதரவு பத்திரிகையாளர் மரணம்- கத்தார் மீது குற்றச்சாட்டு Twitter
உலகம்

Qatar: Football ஸ்டேடியத்தில் LGBTQ ஆதரவு பத்திரிகையாளர் மரணம்- கத்தார் மீது குற்றச்சாட்டு

முன்னதாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் டி-சர்ட் அணிந்து வந்ததற்காக இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Antony Ajay R

கத்தாரில் உலக் கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்த செய்திகளை சேகரித்து வந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கிரான்ட் வால் மரணமடைந்ததாக அவரது சகோதரர் கூறியுள்ளார்.

முன்னதாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் டி-சர்ட் அணிந்து வந்ததற்காக இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் கிரான்ட் மரணித்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் மரணத்துக்கான காரணம் மற்றும் எப்படி நிகழ்ந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

கிரான்ட் மரணத்துக்கு அமெரிக்க கால்பந்து அணி மற்றும் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த மரணத்தில் கத்தார் அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக கிரான்டின் சகோதரர் எரிக் கூறியிருப்பதாக என்.டி.டி.வி தளம் கூறுகிறது.

"என் பெயர் எரிக் நான் ஒரு ஒரினச் சேர்க்கையாளர். எனக்காகவே என் சகோதரர் கத்தாரில் LGBTQ ஆதரவு டி-சர்டை அணிந்து சென்றார். அவரது உடல் நலம் சிறப்பாகவே இருந்தது. அவர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக என்னிடம் தெரிவித்திருந்தார்.

அவர் மரணமடைந்திருப்பார் என நாம் நம்பவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்." என அவர் இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறியதாக என்.டி.டி.வி செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிரான்ட் சில நாட்களுக்கு முன்னர் கத்தாரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

48 வயதாகும் கிரான்ட் நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தது அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

அவர் ஸ்டேசியத்தில் மயங்கியதும் அவருக்கு சி.பி.ஆர் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் ஊபர் கார் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது.

மரணம் பற்றிய விசாரணை முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், வெளியுறவுத்துறை கிரன்ட் வாலின் குடும்பத்துடன் "நெருக்கமான தகவல்தொடர்புகளில்" இருப்பதாக கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?