William and Family

 

Twitter

உலகம்

Ukraine War : அமெரிக்காவிலிருந்து சென்று உக்ரைனில் சிக்கியிருந்த மகளை மீட்ட தந்தை !

Antony Ajay R

அமெரிக்காவின் மாசுசோசட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த வில்லியம் ஹபர்ட் என்ற நபர் உக்ரைன் போரில் சிக்கியிருந்த அவரது மகளை மீட்பதற்காக உக்ரைன் சென்று அவர்களை அழைத்து வந்துள்ளார். “ஒரு அப்பா இதைத்தான் செய்வார்” எனக் கூறியிருக்கிறார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததனால் லட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்கர் ஒருவர் தன் மகளுக்காக உக்ரைனுள் நுழைந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வில்லியம்-ன் மகள் ஐஸ்லின் கடந்த 2018ம் ஆண்டு மேல் படிப்புக்காக உக்ரைன் சென்றிருக்கிறார். அவருக்கு அங்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டதால் செரபிம் என்ற மகன் பிறந்திருக்கிறார். முன்னதாகவே ஒரு முறை வில்லியம் உக்ரைன் சென்று டி.என்.ஏ சோதனைக்கு ஏற்பாடு செய்து அவர் பேரனுக்கு அமெரிக்கக் குடியுரிமை வாங்க முயன்றார். ஆனால் அப்போது அவரால் முடியவில்லை.

“இந்த சூழலில் ஒரு தந்தை என்ன செய்வாரோ அதை தான் நான் செய்திருக்கிறேன்”
- வில்லியம்

8 மாதமாகும் செரபிம் கொரோனா பரவல் ஊரடங்கின் போது பிறந்ததால் அவருக்குப் பிறந்த சான்றிதழோ, பாஸ்போர்டோ இல்லை. இதனால் அவர்கள் உக்ரைனிலிருந்து திரும்ப முடியாமல் தவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்பிலிருந்தே வில்லியம் அவரது மகளை அமெரிக்கா அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இறுதி நடவடிக்கையாக அவர், அமெரிக்காவிலிருந்து போலந்துக்கு விமானம் மூலம் பயணித்து அங்கிருந்து தரைவழியாகவே எல்லையைக் கடந்து உக்ரைன் சென்றுள்ளார்.

அவர் எடுத்த ஆபத்தான முடிவு குறித்து, “இந்த சூழலில் ஒரு தந்தை என்ன செய்வாரோ அதை தான் நான் செய்திருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார் வில்லியம்.

உக்ரைனுக்குள் நுழைந்த வில்லியம் அங்கு ரயில் மார்க்கமாக கீவ் நகருக்குச் சென்று அவரது மகளைப் பார்த்திருக்கிறார். போர் காரணமாக ஆண்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாததால் ஐஸ்லினின் காதலரை அவர்களால் அழைத்துக் கொள்ள முடியவில்லை. வில்லியம் அவரது மகள், பேரனுடன் உக்ரைனை விட்டு வெளியேறினார்.

மற்ற அகதிகளுடன் இணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய வில்லியம்-ன் குடும்பம் அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் தஞ்சமடைய உள்ளனர். தன் பேரனுக்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டாலும், அவனை எல்லையைக் கடக்க அனுமதிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வில்லியம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?