cat Twitter
உலகம்

Tender: செல்ல பிராணிகளுக்கான டேட்டிங் ஆப் - அசத்தும் அமெரிக்க காவல்துறை

Keerthanaa R

ஃப்ளோரிடாவின் ப்ரெவார் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் வளர்ப்பு பிராணிகளுக்கான டேட்டிங் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபர்எவர் ஹோம்ஸ் (Furever Homes) என்ற டேக்லைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலம், நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை தத்தெடுக்க உதவும், முயற்சியாக செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது காவல்துறை

Junny's Tender Site

செல்லப்பிராணிகள் என்பது நம் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும். நமக்கு ஏற்படும் கவலைகள் அனைத்தையும் மறக்கடிக்க, நம்மோடு எப்போதும் உள்ள ஒரு துணை நாம் வளர்க்கும் இந்த விலங்குகள் தான்.


நாம் பார்த்து தேர்ந்தெடுத்து வளர்க்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் அவைகளைப் பாதுகாக்க என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்கிறோம்.


நம் தெருக்களில் தினந்தோறும் ஒரு நாய் அல்லது பூனையையாவது பார்த்துவிடுவோம். அவைகளுக்கு நம் எல்லோர் வீட்டிலிருந்தும் உணவு, தண்ணீர், பால் போன்றவற்றை வழங்கி ஒரு பொது சொத்துபோல கவனித்துக்கொள்ளும் கதைகள் ஏராளம்.

ஆனால் அவற்றிற்கு உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால், அதற்கான சிகிச்சை வழங்க நாம் முன்வருவோமா என்று கேட்டால், கசந்தாலும் இல்லை என்பது தான் பதில்.

Pet Animal

இப்படி போதிய ஆதரவற்று இருக்கும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு, ஒரு நிரந்தரமான இருப்பிடம் மற்றும் குடும்பத்தை வழங்கும் நோக்கத்தோடு அமெரிக்க காவல் துறை ஒரு டேட்டிங் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஜுன்னீஸ் டெண்டர் சைட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் ஆதரவற்று இருக்கும் நாய், மற்றும் பூனைகளை தத்தெடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த செல்ல பிராணிகளுக்கு அன்பும், அரவணைப்பும், ஆதரவும் தரும் குடும்பங்களை கண்டுபிடிப்பது தான் இந்த செயலியின் நோக்கம்

Pet Animal

ஃப்ளோரிடாவின் ப்ரெவார் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் தன் Facebook பக்கத்தில் இந்த செயலியை பற்றி அறிவித்துள்ளது. காவல் துறை நாயான K-9 ஜுன்னி என்ற நாயுடன் சேர்ந்து ஷெரிஃப் வேய்ன் ஐவி என்பவர் இந்த செயலியை கொண்டுவந்துள்ளனர்.

Junny's Tender Site-ல் ஜுன்னி தனது நண்பர்களின் புகைப்படத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் பதிவேற்றும். இந்த செல்ல பிராணிகள் ஃப்ளோரிடாவின் அனிமல் கேர் சென்டரில் உள்ள பிராணிகளின் புகைப்படம் பதிவேற்றப்படும். இதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் பிடித்திருந்தால் ரை ஸ்வைப் செய்தால் போதும்.அணுக

Pet Animal

காவல்துறையின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒருவர் "எல்லா விலங்குகளுக்கும் ஒரு நிரந்தர இருப்பிடம் தேவைதான், நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவர், "விலங்கு பிரியர்களை அணுக எவ்வளவு அழகான முயற்சி?" என்றும், "அற்புதம், இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்று இன்னொருவரும் பதிவிட்டிருந்தார்.

இது வழக்கமாக நாம் நமது செல்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யும் செயலிகளை போல இருக்காதாம். அதில் பார்க்கும் புகைப்படங்களில் இருக்கும் செல்லபிராணிகளை பிடித்திருந்தால் ரை ஸ்வைப் செய்யவேண்டும். அதன் பின்னர் தேவையான தகவல்களை சமூக வலைதளங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?