பெத்லஹேமில் அதிபர் ஜோ பைடன் NewsSenseTn
உலகம்

பெத்லஹேமில் அதிபர் ஜோ பைடன் : பாலஸ்தீன் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

Govind

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பெத்லஹேமிற்கு கொஞ்சம் அனுதாபத்துடன்தான் வந்தார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானம் தேவை என்றெல்லாம் அவர் பேசினாலும் அரசியல் ரீதியாக முன்னேற்றம் இருக்குமா என்பது சந்தேகம்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபருடன் நீண்ட சந்திப்பை அவர் நடத்தினார். அதில் பாலஸ்தீனத்தின் சுதந்திரமான அரசை உருவாக்கும் தனது நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் கூறினார்.

அதே நேரம் இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்த நேரம் பொருத்தமாக இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த 86 வயதான பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், இருநாடுகளின் தீர்வுக்கான வாய்ப்பு நீண்ட காலமாக தள்ளிப் போகாமல் இருக்கலாம் என்றார்.

கடந்த காலத்தில் அமெரிக்கா, பாலஸ்தீனியர்களுடனான உறவு மோசமாக இருந்தது. அதை சரி செய்யும் விதத்தில் அமெரிக்க நிதி உதவியை அறிவித்தது. தற்போது அதிபர் ஜோ பிடன் விஜயத்தில் ஏராளமான பொருளதார உதவிகள் மற்றும் 4ஜி செல்பேசி சேவையை அளிப்பதையும் செய்ய இருக்கிறது.

அதிபர் பிடன் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியான மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸில் உள்ள அகஸ்டா விக்டோரியா மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் யாரும் இங்கு வருகை தந்ததில்லை. அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் நம்பிக்கையோடு இருப்பதற்கான செய்தியை கொண்டு வந்திருப்பதாக கூறினார்.

மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் அருகிலுள்ள ஐந்து பகுதிகளுக்கான முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமான பாலஸ்தீனிய மருத்துவமனைக்கு அமெரிக்கா 100 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குகிறது.

கடந்த கால அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது. பாலஸ்தீனர்கள் கிழக்கு ஜெருசேலத்தை தமது எதிர்கால அரசின் தலைநகராக உரிமை கோருவதை அமெரிக்கா கணக்கில் கொள்ளவில்லை. இந்நிலையில் அதிபர் பிடனது வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

வேதனைப்படும் பாலஸ்தீனியர்கள்

ஜெருசலேமில் இருந்து, அதிபர் பிடனின் நீண்ட வாகன அணிவகுப்பு இஸ்ரேலின் சோதனைச் சாவடி வழியாக பெத்லகேமை அடைய சுமார் 15 நிமிடங்கள் ஆனது.

அதிபர் செல்லும் வழியில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மறைந்த அல்ஜசீரா நிருபர் ஷிரின் அபு அக்லாவின் சுவரோவியம் 8 மீட்டர் உயரமான காங்கிரீட் சுவரில் வரையப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு மே மாதம் ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தகவல் குறித்து அவர் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இஸ்ரேலிய சிப்பாயால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. இதை அடுத்து அந்த நிருபரது மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கு வருவதற்கு முன்பு அதிபர் பிடன் இஸ்ரேலிய அதிகாரிகளை சொகுசு ஹோட்டல்களில் சந்தித்து பேசினார். ஆனால் இங்கோ அவரது ஆடம்பர கார் பாலஸ்தீன அகதிகள் நிரம்பிய முகாம் வழியாக சென்றது.

அங்கே " திருவாளர் அதிபர் அவர்களே இது நிறவெறி" என்ற பதாகையை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் வைத்திருந்தது. இது அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரிக்ககூடிய வாசகமாகும்.

அதன் பிறகு பாலஸ்தீன பகுதி அதிபர் தலைமையகத்தில் அமெரிக்க அதிபருக்கு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு இருந்தது. தனிப்பட்ட பேச்சுகளுக்கு பிறகு இரு அதிபர்களும் நண்பர்கள், விருந்தினர்கள் போல அழைத்துக் கொண்டனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீனியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் "அவமானங்கள்" பற்றி அனுதாபத்துடன் பேசிய திரு பிடன், "பாலஸ்தீன மக்கள் இப்போதும் பாதிக்கப்படுகிறார்கள்" என்று கூறினார். இருப்பினும் இரு தலைவர்களிடையே ஆழமான வேறுபாடுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் புதிய கூட்டணிகளை வலுப்படுத்தவும், அதன் "பிராந்திய ஒருங்கிணைப்பை" மேம்படுத்தவும், ஈரானில் இருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இராணுவ கூட்டாண்மைகளை உருவாக்கவும் அமெரிக்கா எவ்வாறு முயற்சிக்கிறது என்பதை அதிபர் பிடனின் இந்த மத்திய கிழக்கு விஜயம் காட்டுகிறது. அவரது மத்திய கிழக்கு நாடுகளுக்கான வருகையின் காரணமே இதுதான். இதை பாலஸ்தீனர்கள் கடும் சினத்துடன் பார்க்கிறார்கள்.

இதை அமெரிக்கா மறுத்தாலும் பாலஸ்தீனர்கள் இதை தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக பார்க்கிறார்கள். கடந்த காலத்தில் சுதந்திர பாலஸ்தீன அரசு உருவான பிறகே சவுதி அரேபிய உள்ளிட்ட அரபுலக நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிப்பதாக வாக்குறுதி அளித்தன. தற்போது அப்படி இல்லாமல் அரபுலகம் இஸ்ரேலுடன் உறவு கொள்கிறது. அதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்நிலையில் பாலஸ்தீன மக்கள் என்ன நினைப்பார்கள்?

மேற்குக் கரை மற்றும் காஸாவில் அதிபர் பிடென் வருகைக்கு எதிராக நிறைய பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் அமெரிக்காவை ஒரு நேர்மையான நாடாக கருதவில்லை.

“அவர் இங்கே ஒரு காரணத்தில் தெளிவாக இருக்கிறார். அது இஸ்ரேலியர்களுகு உதவ மட்டுமே, பாலஸ்தீனியர்களுக்கு அல்ல" என்று ராமல்லாவில் பாலஸ்தீன மக்கள் கூறுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு வெளியே உண்மை என்ன?

பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஒரு சுதந்திர பாலஸ்தீனம் உருவாவதும் அதை இஸ்ரேல் அங்கீகரிப்பதும்தான் சர்வதேச சமூகத்தால் விரும்பப்படும் அமைதிக்கான தீர்வு.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இது சாத்தியமற்றதாகத் தோன்றியுள்ளது. நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கு இரு தரப்பும் தயாராக இல்லை என்று அமெரிக்கா நினைக்கிறது.

இது தரப்பின் அரசியல் நிலைமையை எடுத்துக் கொள்வோம்.

பாலஸ்தீனியத் தலைமையானது மேற்குக் கரையின் சிலபகுதிகளைக் கட்டுப்படுத்தும் பொதுஜன முன்னணிக்கும், காஸாவை ஆளும் ஹமாஸ் என்ற போராளிக் குழுவிற்கும் இடையே பிளவுபட்டுள்ளது. அதே நேரம் இஸ்ரேலிய அரசியலில் வலதுசாரி ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையான அரசாங்கம் இல்லாமல் அடிக்கடி தேர்தல்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபரது விஜயம் பாலஸ்தீனியர்களுக்கு எந்த தீர்வையும் வழங்கிவிடவில்லை. உதட்டில் நட்பும் உள்ளத்தில் வெறுப்பும் கொண்டதாக அமெரிக்காவை பாலஸ்தீன மக்கள் பார்க்கிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?