சீனா: உளவு பலூனுக்கு மேல் பறந்து செல்ஃபி எடுத்த அமெரிக்க விமானி - சல்யூட் பெருந்தலைகள்! ட்விட்டர்
உலகம்

சீனா: 60,000 அடி உயரத்தில் உளவு பலூனுடன் செல்ஃபி எடுத்த அமெரிக்க விமானி!

North American Aerospace Defense Command (NORAD) என்றழைக்கப்படும் அமெரிக்கா & கனடாவின் ஒருங்கிணைந்த ஆபரேஷனைச் சேர்ந்த போர் விமானங்கள் தான் சீன பலூனை முதலில் கண்டுபிடித்தன. அப்போது உடனடியாக பலூனை ராணுவம் சுட்டு வீழ்த்தவில்லை.

NewsSense Editorial Team

சில வாரங்களுக்கு முன், சீன நாட்டைச் சேர்ந்த பலூன் ஒன்று அமெரிக்க வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த விஷயம் வெளியாகி, சர்வதேச அரங்கில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, அமெரிக்க தரப்பு அந்த சீன பலூனை சுட்டி வீழ்த்தியது.

அமெரிக்காவை உளவு பார்க்க, சீனா இந்த பலூன்களை அனுப்பி இருக்கலாம் என அமெரிக்க தரப்பு குற்றம்சாட்டியது.

அப்போது அது வெறும் வானிலை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பலூன் தான் என்றும், திசை மாறி அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் சீனா தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா அதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. வாஷிங்டன்னோ, தொடர்ந்து பெய்ஜிங் தங்களை உளவு பார்க்க இந்த பலூன்களை அனுப்பியதாகவே கூறுகிறது.

உளவு பலூன்:

அமெரிக்க தரப்பில் சீன பலூன் தொடர்பாக இரு விமானங்கள் மூலம் அந்த பலூன்களின் திறன்கள் என்ன, அதனுடைய பயண வழித்தடங்கள் என்ன என்று ஆராய்ந்ததாக பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது தான், சீன பலூன்கள் உளவுத் தகவல்களை சேகரிக்க வல்லது என கண்டுபிடிக்கப்பட்டதாக, அமெரிக்க உள்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

முதன்முதலில் சீன பலூன் குறித்து, அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது, கடந்த ஜனவரி 28ஆம் தேதிதான்.

North American Aerospace Defense Command (NORAD) என்றழைக்கப்படும் அமெரிக்கா & கனடாவின் ஒருங்கிணைந்த ஆபரேஷனைச் சேர்ந்த போர் விமானங்கள் தான் சீன பலூனை முதலில் கண்டுபிடித்தன.

அப்போது உடனடியாக பலூனை ராணுவம் சுட்டு வீழ்த்தவில்லை.

உடனே சுட்டு வீழ்த்தாது ஏன்?

உடனடியாக சுட்டி வீழ்த்தினால், அந்த பலூனில் உள்ள பொருட்கள் நிலப்பகுதியில் எங்காவது விழுந்து பலத்த பொருட்சேதத்தையோ, உயிர் சேதத்தையோ ஏற்படுத்திவிடக் கூடாது என பொறுமை காத்தனர்.

சீனா: செயற்கை கோள்கள், ட்ரோன்கள் வளர்ந்த காலத்திலும் உளவு பார்க்க பலூன்களா? - காரணம் என்ன?

இந்த சச்சரவுகள் காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தான், அந்த பலூன் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவிச் சிலையை விட பெரிதாகவும், ஜெட்லைனர் அளவுக்கு பேலோட் கொண்டதாகவும் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

அந்த பலூன் சுமார் 60,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

உளவு பலூனுடன் செல்ஃபி:

ஒரு ராணுவ வீரர், சீன பலூனோடு இருப்பது போன்ற செல்ஃபி படத்தை சில தினங்களுக்கு முன் (பிப்ரவரி 22, புதன்கிழமை) அமெரிக்க தரப்பிலிருந்து வெளியானது.

இந்தப் படம், தெற்குக் கரோலினா பகுதியில் சீன பலூன் சுட்டி வீழ்த்தப்படுவதற்கு முன், பிப்ரவரி 4ஆம் தேதி எடுக்கப்பட்டது என பிபிசி வலைதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது இந்தப் படத்துக்கு பெண்டகன் அலுவலகத்தில் பல அதிகாரிகள் சல்யூட் அடிப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் படம் எதிலிருந்து எடுக்கப்பட்டது?

அமெரிக்காவின் யூ - 2 என்கிற உளவு விமானத்தின் காக்பிட்டில் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் சுமார் 70,000 அடி உயரம் வரை பறக்க வல்லது என்றும், இந்த விமானத்தை இயக்கும் விமானிகள், விண்வெளி வீரர்களைப் போல அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆடைகள் & அங்கிகளை அணிந்து கொண்டே பறப்பார்களாம்.

இதன் பிரத்யேகப் பணியே உளவு பார்ப்பது தான். யூ - 2 விமானங்கள் ஒரு காலத்தில் சி ஐ ஏ அமைப்பால் இயக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனின் சிதைந்த பாகங்களைத் தேடி எடுக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்தது.

இதுவரை கிடைத்த பாகங்களை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெண்டகன் அமைப்பின் துணை பத்திரிகைச் செயலர் சப்ரினா சிங் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?