பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர் canva
உலகம்

T20WC: பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர் - பாகிஸ்தான் பிரதமர் பதிலடி!

Keerthanaa R

நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது. அதை தொடர்ந்து ஜிம்பாப்வே அதிபர் பாகிஸ்தானை கலாய்த்தது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

20 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்கி, சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஜிம்பாப்வே பாகிஸ்தான் அணிகள் மோதின. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்நிலையில், ஜிம்பாப்வே அதிபர் எமரசன் டம்பட்சோ நான்காக்வா ட்விட்டரில் அணியை பாராட்டினார். உடன் "அடுத்த முறை நிஜ Mr.Beanஐ அனுப்புங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரு அணிகள் விளையாடவுள்ளது என தெரிந்ததிலிருந்து ஜிம்பாவே ரசிகர்கள் டிவிட்டரில் பாகிஸ்தானை கலாய்த்து வந்தனர். இதற்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு வேடிக்கை சம்பவம்.

ஒரு முறை, பிரபல ஆங்கில நடிகரான Mr Beanஐ (Rowan Atkinson) அழைத்து வருவதாக கூறி அவரை போலவே இருந்த பாகிஸ்தான் காமெடியன் ஒருவரை அழைத்து வந்துள்ளனர். ஜிம்பாப்வே மக்கள் மிஸ்டர் பீனை பார்க்கப்போவதாக ஆவலுடன் வந்து ஏமாற்றமடைந்தனர். அவர்கள் இந்த வலையில் விழுந்து கிட்டதட்ட 10 டாலர் இழந்துள்ளனர்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு கடந்த புதன் கிழமையிலிருந்தே ஜிம்பாப்வே ரசிகர்கள் பாகிஸ்தானை நாங்கள் பழிக்கு பழி தீர்ப்போம் என வேடிக்கையாக பேசி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு ரன்னில் ஜிம்பாப்வேவிடம் தோற்றது. இதனால், எங்களை ஏமாற்றியதற்கு இது தான் ரிவெஞ்ச் எனக் கூறி வந்த நிலையில், ஜிம்பாப்வே அதிபரும் தன் டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானை கலாய்த்திருக்கிறார்.

அவர் அந்த பதிவில், "எப்படி பட்ட வெற்றி இது ஜிம்பாப்வேவுக்கு! செவ்ரோன்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை நிஜ Mr Beanஐ அனுப்புங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் பிரதமர், "எங்களிடம் நிஜ Mr Bean இல்லாமல் இருக்கலாம், ஆனால் தோற்றால் மீண்டு எழும் ஒரு நகைச்சுவையான பழக்கம் இருக்கிறது... Mr President வாழ்த்துக்கள், உங்கள் அணி இன்று சிறப்பாக விளையாடியது" என்று அவர் பதிலுக்கு ட்வீட் செய்திருந்தார்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?