உக்ரைன் ரஷ்யா போர் ஒன்றறை மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐநா சபையில் இடை நீக்கம் செய்யப்பட்டும், பல நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளானாலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. பல இடங்களில் ரஷ்ய ராணுவ வீரர்கள் பின் வாங்குவதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. எனினும் உக்ரைனிய மக்களும் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் அரசு தெரிவிக்கிறது. பல இடங்களில் உக்ரைன் தெருக்களில் மக்கள் இறந்து கிடக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிப் பதற வைக்கின்றன.
இந்நிலையில் போரில் தன் தாயைப் பறிகொடுத்த 9 வயதுக் குழந்தை உருக்கமாகத் தனது அம்மாவின் நினைவுகளில் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. உக்ரைன் உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடிதத்தில் அந்த சிறுமி, . அந்த கடிதத்தில் அச்சிறுமி, ''அம்மா... நீங்கள் இந்த உலகத்தில் சிறந்த அம்மா. நான் உங்களை எப்பொழுதும் மறக்கமாட்டேன். நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நல்ல விதமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு சொர்க்கத்துக்கு வருவேன். நான் சொர்க்கத்தில் உங்களை சந்திக்கிறேன்” என எழுதியிருந்தார்.
மேலும் உக்ரைன் அமைச்சர் தனது ட்விட்டரில் மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் பிப்ரவரி 24ம் தேதி ரஷ்ய இராணுவத்தால் சிதைக்கப்பட்டது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ரஷ்ய இராணுவத்தினர் அந்த வீட்டிலிருந்த நாய்களைக் கூட விட்டுவைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.