பயணங்கள், அழகான அனுபவங்களை நமக்கு தருகிறது. அதிலும் குறிப்பாக ட்ராவலர்கள் அட்வெஞ்சர்களை தேடி தேடி சென்று பார்த்து வருகின்றனர். சிலர் திகிலான பயணங்களை மேற்கொள்ள நினைக்கிறார்கள்.
அப்படி ஒரு பயணத்தை தான் மக்களுக்கு குவாண்டாஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து குவாண்டஸ் நிறுவனம் பயணிகளுக்கு இந்த சேவையினை வழங்கி வருகிறது.
சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்து புதிய ஒரு வெப்பமண்டல தீவில் பயணிகளை விமானம் இறக்கி விடுகிறது.
இந்த விமானத்தில் பறக்கும் பயணிகளுக்கு விமானத்தில் இருக்கும் வரை தெரியாது, அவர்கள் தரையிறங்கும் போதுதான் தெரிய வரும் எங்கு செல்கிறார்கள் என்று!
ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் உள்ள பிற விமான நிறுவனங்கள் கடந்த காலங்களில் இதேபோன்ற பயணங்களை வழங்கி வருகின்றன.
தற்போது ஆஸ்திரேலியாவில், மர்ம விமானங்கள் என்று ஒரு வணிகம் உள்ளது. இது தெரியாத இடங்களுக்கு குறுகிய கால பயண பேக்கேஜ்களை வழங்குகிறது.
இந்த விமானங்கள் பிரிஸ்பேன், மெல்போர்ன் அல்லது சிட்னி விமான நிலையங்களில் இருந்தும், அடிலெய்டு, கோல்ட் கோஸ்ட், நியூகேஸில், கான்பெர்ராவிலிருந்தும் இயக்கப்படுகின்றன.
இந்த பயணத்தில் பயணிகள் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று இரவுகளை கழிக்கலாம். அவர்களை அழைத்து செல்லும் இடங்களும் மர்மமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக இங்கிலாந்திலும் மர்ம விமான சேவை தொடங்கியுள்ளன. இதில் பிரபலமான போயிங் 737 விமானங்களும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust